Tuesday, December 12, 2017

.
Breaking News

ஐ.நா விசேட அறிக்கையாளரின் பரிந்துரையை பின்பற்றத் தேவையில்லை!

ஐ.நா விசேட அறிக்கையாளரின் பரிந்துரையை பின்பற்றத் தேவையில்லை!
ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தர வாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளரின் பயணம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கங்கள், குறித்த விடயங்கள் தொடர்பில் அறிவுரைகளையும், கருத்துக்களையும் பெறுவதற்காக இத்த கைய விசேட அறிக்கையாளர்க ளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தன.
எனினும், அவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை.
அரசாங்கங்களுக்கு கிடைக்கக்கூடிய தாகவுள்ள விசேட அறிக்கையாளர்களின் நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். நிறுவன ரீதியான திறனை கட்டியெழுப்பல், கொள்கை உருவாக்கம் முதலியனவற்றிற்கு நலன் வழங்கும் பாங்கொன்றில் அவர்களது ஆலோசனையும் நிபுணத்துவமும் தேவையென அரசாங்கம் கருதுமிடத்து அவற்றைப் பயன்படுத்தப்படலாம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐ.நா சிறப்பு அறிக்கை யாளர் பப்லோ டி கிரெய்ப் 13 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்து பலதரப்பு சந்திப்புக்களையும் மேற்கொண்டு வரும் நிலையில் அரசின் மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *