Monday, February 19, 2018

.

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்காக – வடக்கில் நாளை பூரண கதவடைப்பு!

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்காக – வடக்கில் நாளை பூரண கதவடைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் நிபந்த னையற்ற விடுதலையை வலியுறுத்தியும், மீளவும் அவர்களது வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்று க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் நாளை 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கில் பூரண கதவடைப்புக்கு (ஹர்த் தாலுக்கு) பொது அமைப்புகளால் அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பினை இலங்கை ஆசிரி யர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யம், யாழ்.பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், அகில இலங்கை சைவ மகாசபை, வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கம், சமூக விஞ் ஞான ஆய்வு மன்றம்,  சமூக நீதிக்கான வெகு ஜன அமைப்பு, வலி வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்குழு, தமிழ்த் தேசிய மக் கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடு தலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடு தலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட் டணி, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, யாழ்.பல்க லைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழை ப்பாளர் சங்கம், தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், யாழ்.பொறியியலாளர் சங்கம், ஐக்கிய சோசலிச கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை ஆகிய இருபதுக்கும் மேற்பட்ட பொது அமைப்புகள் இணைந்து விடுத்துள்ளன.
கதவடைப்பு  அழைப்புத் தொடர்பில் மேற்படி அமைப்புகள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசிய இனத்தின் பிறப்புரிமை களை உறுதிப்படுத்துவதற்காகத் தங்களது வாழ்வை அர்ப்பணித்துப் போராடியவர்கள் உட்படப் பலர் அரசியற் கைதிகளாகச் சிறை களில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருப்பத னைக் கண்டிக்க வேண்டியதும், அவர்க ளது விடுதலையை வலியுறுத்திப் போராட வேண்டியதும் ஒவ்வொரு தமிழ் மக்களதும் ஒவ்வொரு தமிழ் மகனதும் தார்மீகப் பொறு ப்பும் வாழ்வுக் கடமையும் ஆகிவிட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு என்பது, தற்போது ஒரு சட்டரீதியான விடயம் என்பதைக் கடந்துவிட்டது. அது நியாயத்தின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஓர் விடயமாக ஆகிவிட்டது.
அத்தோடு – ஓர் அரசியல் தீர்மானத்தின் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படையான பிரச்சினைகளுள் ஒன்று என்ற பரிமாணத்தையும் அடைந்துவிட்டது.
போரின் இறுதிநாள்வரை ஆயுதங்கள் தாங்கிப் போராடிய பல மூத்த போராளிகள் உட்பட 12ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலிகளை, குறுகிய காலத் தடுப்பிற்குப் பிறகு, மீளவும் சமூகத்துடன் இணைய வழிவகை செய்த ஓர் அரச பொறிமுறையானது, வெறும் 132 பேர்களை மட்டும் தொடர்ந்தும் சிறை களில் அடைத்திருப்பதானது எவ்வித சட்ட அர்த்தமும் இல்லாத ஓர் செயற்பாடு ஆகும். தமிழர்களுடன் தொடர்பில்லாத அரசியற் காரணங்களினாலேயே அவர்கள் தொடர்ந் தும் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது.
 எமது பிரதிநிதிகளின் இந்த அலட்சியப் போக்கினதும், உதாசீனத்தினதும், அக்கறை யின்மையினதும் விளைவாக – தான்தோன் றித்தனமாகச் செயற்படும் இந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம், தமிழ் பிர தேச நீதிமன்றங்களில் உள்ள எமது அரசியற் கைதிகளின் வழக்குகளை, சிங்களப் பிர தேசங்களுக்கு மாற்றுகின்றது. அவர்களுக்கு எதிரான சாட்சிகளுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை என்று சினமூட்டும் காரணங்களை அடுக்குகின்றது. அத்தோடு – வழக்குகளைத் துரிதமாக நடத்தி முடிக்காமல் வேண்டு மென்றே இழுத்தடிக்கின்றது.
இதன் காரணமாக – தமக்கான அடிப்படை நீதியைக் கோரி தமிழ் அரசியற் கைதி கள் மூவர், கடந்த 16 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தங்களது வழக்குகளை மீண்டும் தமிழ் பிர தேச நீதிமன்றங்களுக்கு மாற்றுவதுடன,; தமது வழக்குகளை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதுவே அவர்களது உட னடிக் கோரிக்கையாக உள்ளது.
அவர்களது கோரிக்கையை நிறை வேற்ற வலியுறுத்தி எமது அதிகூடிய வல்ல மைக்கு உட்பட்ட எமது அழுத்தத்தை நாம் ஒவ்வொருவரும் ஒன்றாய் திரண்டு பிரயோ கிப்போம். எவர் கைவிட்டாலும் அவர்களை நாம் கைவிடமாட்டோம் என்ற தகவலைச் சொல்லுவோம்.
(1) தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழ க்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடி ப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,
(2) முழுத் தமிழ் அரசியற் கைதிக ளையும் ஓர் அரசி யற் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும்,
(3) அசமந்தப் போக்கைக் கைவிட்டும் – மழுப்பல் பதில்களை வழங்காமலும் – அனைத்து தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிப்பதற்கான நேரடி அழுத்தத்தினை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்குமாறு எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வற் புறுத்தியும்,
எதிர்வரும் 13.10.2017 வெள்ளிக் கிழமை வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்வதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாம் உரிமையோடு அழைக்கின்றோம். அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத் துச் செயற்பாடுக ளையும் முழுமன தோடு நிறுத்தி – நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அர சியற் கைதிக ளுக்கு எமது ஆத்ம பல த்தைக் கொடுப்போம்.
தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை – இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக் கும் இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13.10. 2017 வெள்ளிக்கி ழமை காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்றாகத் திரள்வோம் என தெரி
விக்கப்பட்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *