Monday, October 23, 2017

.
Breaking News

இதில் இது இன்பம்?.. சங்கர சுப்பிரமணியன்.

இதில் இது இன்பம்?.. சங்கர சுப்பிரமணியன்.

ஆலயமணியின் ஒலி ஆன்மீகவாதிக்கு இன்பம்

அன்புமகவின் மழலை ஒலி
அனைவருக்கும் இன்பம்
சிவன் மேல் பால் அபிசேகமாய் ஓடினால்
பரவசப்படும் பக்தர்களுக்கு இன்பம்
பர்வதத்தின் மேல் பால்போல் அருவி ஓடினால்
பார்ப்வர்கள் அனைவருக்குமே இன்பம்
மாமரம் பழுத்திருந்தால் மந்திகளுக்கு  இன்பம்
மக்கள் மனதில் பேதம் அகன்றால்
மாநிலம் வாழ் மாந்தர்க்கின்பம்
மதமதிலும் புரட்சி வந்தால் வராது சிலர்க்கு இன்பம்
மலையாள தேசம்கண்ட சமத்துவ புரோகித்தால் மக்களுக்கின்பம்
நல்லதை எல்லாம் நயவஞ்சகமாய் திரித்தல் சிலர்க்கின்பம்
நாட்டிலே நல்லது நடக்க நாலாபுறம் வசைபடுதல் சிலர்க்கின்பம்
அவரவர் கருத்தென்பது அவரவர்க்கின்பம்
நஞ்சை நல்லதென்பது சிலருக்கின்பம்
நஞ்சை நஞ்சென்பது சிலருக்கு இன்பம்
இதில் எது இன்பம் எது துன்பம்
இதில் அறிவுக் கண்ணால் காண்பது இன்பம் என்பர் சிலர்
அல்ல புறக்கண்ணால் காணுவதே
இன்பம் என்பர் சிலர்
இன்பம் இன்பம் எங்கே தேடும்
மனிதர்களே
இன்பம் எது துன்பம் எது எவரிங்கு
அறிவார்
பசித்தவனுக்கோ ஒருவாய் சோற்றிலேதான் இன்பம்
பசியில்லா பக்தனுக்கோ பசிக்காத
பகவானுக்கு படைப்பதில் இன்பம்
இதில் எது இன்பம் என்று சொல்லவந்தால் அதுவன்றோ இன்பம்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *