Monday, February 19, 2018

.

“எல்லோரும் அர்ச்ச‌க‌ர் ஆக‌ இந்து ம‌த‌மே அனும‌திக்கிற‌து”

“எல்லோரும் அர்ச்ச‌க‌ர் ஆக‌ இந்து ம‌த‌மே அனும‌திக்கிற‌து”

பிராம‌ண‌ர் இல்லாத‌ க‌ண்ண‌ப்ப‌ நாய‌னாரை அர்ச்ச‌க‌ராக‌ நிய‌மித்து, அன்றே சிவ‌பெருமான் புர‌ட்சி செய்து விட்டாராம். கேட்ப‌வ‌ன் கேணைய‌ன் என்றால் “எல்லோரும் அர்ச்ச‌க‌ர் ஆக‌ இந்து ம‌த‌மே அனும‌திக்கிற‌து” என்று புளுகுவார்க‌ள்.

ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ சாதிக‌ளை சேர்ந்த‌ பூசாரிக‌ள் பூஜை செய்யும் சிறுதெய்வ‌ வ‌ழிபாடு கால‌ங்கால‌மாக‌ ந‌ட‌ந்து வ‌ருகின்ற‌து. அந்த‌த் தெய்வ‌ங்க‌ளையும், வ‌ழிபாட்டு முறையையும் இந்து ம‌த‌ம் ஏற்றுக் கொள்வ‌தில்லை. அத‌ற்குப் ப‌திலாக‌ ஆக‌ம‌ விதிப் ப‌டி க‌ட்ட‌ப் ப‌ட்ட‌ கோயில்க‌ளில் பிராம‌ண‌ர்கள் ம‌ட்டுமே கும்பாபிஷேக‌ம் செய்து அர்ச்ச‌க‌ராக‌வும் இருக்க‌லாம் என்று வ‌லியுறுத்துகிற‌து. இந்த‌ விதிக‌ளை மாற்ற‌த் தைரிய‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள், சிறுதெய்வ‌ வ‌ழிபாடு ந‌ட‌த்தும் பூசாரிக‌ளை துணைக்க‌ழைப்ப‌து வேடிக்கையான‌து.

முத‌லில் இந்து ம‌த‌த்திற்குள் ச‌ம‌த்துவ‌த்தை கொண்டு வாருங்க‌ள். சிறு தெய்வ‌ங்க‌ளை பெருந்தெய்வ‌ங்க‌ளுக்கு ச‌ம‌மாக‌ ஏற்றுக் கொள்ளுங்க‌ள். இன்றைக்கும் எந்த‌ ஊரிலும் ஒரு பிராம‌ண‌ ஐய‌ர் சிறுதெய்வ‌த்திற்கு பூஜை செய்ய‌ முன் வ‌ருவ‌தில்லை. பிராம‌ண‌ர் அல்லாத‌ பூசாரி பெருந்தெய்வ‌ வ‌ழிபாடு ந‌ட‌த்துவ‌தை நினைத்துப் பார்க்க‌வே முடியாது. இந்து ம‌த‌த்தில் ம‌னித‌ர்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌, சாமிக‌ளுக்கும் சாதி உள்ள‌து.

Kalai Marx

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *