Monday, December 11, 2017

.
Breaking News

டெல்லிக்கு அருகில் பாகிஸ்தானின் புதிய அணுஆயுத கிடங்கு!

டெல்லிக்கு அருகில் பாகிஸ்தானின் புதிய அணுஆயுத கிடங்கு!

பாகிஸ்தான் அரசு அணு ஆயுதங்களை சேமித்து வைக்க பூமிக்கடியில் புதிய சுரங்கப் பாதைகளை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சுரங்கங்கள் டெல்லிக்கு அருகில் அதாவது, பாகிஸ்தானின் மியான்வாலி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த பகுதி அமிர்தசரசிலிருந்து 350 கி.மீ. தொலைவிலும், புதுடெல்லியிலிருந்து 750 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த செய்தியை வியோன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள 140 அணு ஆயுதங்களையும் சேமித்து வைப்பதற்காக பூமிக்கடியில் இந்த புதிய அணுஆயுத கிடங்கை அமைக்க உள்ளதாக தெரிகிறது. மூன்று சுரங்கப்பாதைகள் கொண்ட இந்த சேமிப்பு கிடங்கு 10 மீட்டர் உயரம் மற்றும் அகலம் கொண்டது. ஒவ்வோரு சுரங்கப்பாதையிலும் 12-லிருந்து 24 வரையிலான அணு ஆயுதங்களை சேமித்து வைக்க முடியும் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரங்கப்பாதைகளிலிருந்து ஆயுதங்களை கொண்டு செல்லும் வழியில் அகலமான சாலைகள் அமைக்கப்பட உள்ளன. உள்ளே செல்வதற்கு மற்றும் வெளியே வருவதற்கு என தனி தனி வாசல்கள் அமைக்கப்படும். விபத்துகள் எதுவும் ஏற்படாமல் இருக்க மொத்த பகுதியும் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் டெல்லிக்கு அருகில் பாகிஸ்தான் அணு ஆயுத கிடங்கு அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *