Monday, October 23, 2017

.
Breaking News

வாகன ஓட்டியை கையெடுத்துக் கும்பிடும் காவல்துறை அதிகாரி!

வாகன ஓட்டியை கையெடுத்துக் கும்பிடும் காவல்துறை அதிகாரி!

அபராதம் விதித்தும் திருத்த முடியாதவர்களை அன்பால் திருத்த முற்பட்ட அதிகாரி..!

நேற்றைய தினம் குடும்பத்தோடு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவரை வழி மறித்து நிறுத்தி, அவரைக் கையெடுத்துக் கும்பிடும் ஆந்திர காவல்துறை அதிகாரிப் பற்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது, அந்த புகைப்படத்தில், ஒரு நபர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை (மொத்தம் 5 பேர்) ஏற்றிக் கொண்டு சாலையில் செல்கிறார். அதாவது இரண்டு மகன்களையும் பெட்ரோல் டேங்க் மீதும், மனைவி மற்றும் ஒரு உறவினரை தனக்குப் பின்னால் இருக்கையிலும் அமரச் செய்து வாகனத்தை ஓட்டிக் கொண்டு வருகிறார்.

அப்போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஷுப் குமார் விதிகளை மீறி 4 பேரை ஏற்றிக் கொண்டு வந்த வாகன ஓட்டியை நிறுத்தி அவரைப் பார்த்து தலைக்கு நேரே இரு கரங்களையும் தூக்கி பெரியக் கும்பிடு போட்டுள்ளார் .

இன்ஸ்பெக்டர் எங்கே அபராதம் விதிப்பாரோ என்று பயந்து போயிருந்த அந்த நபருக்கு அவர் கும்பிடு போட்டதும் வெட்கமாகிப் போய்விட்டது, இனிமேல் எக்காரணம் கொண்டும் விதிகளை மீறி இரு சக்கர வாகனம் ஓட்டுவதில்லை என்று இன்ஸ்பெக்டருக்கு
உறுதியான வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஷுப் குமார் கூறுகையில், அப்போதுதான் நான் ஒன்றரை மணி நேரம் நடந்த சாலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வந்தேன். இவர்களைப் பார்த்ததும் எனது மூளை செயலிழந்துவிட்டது. அவரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் கையெடுத்து கும்பிட்டேன்.

பெட்ரோல் டேங்க் மீது பிள்ளைகளை அமர வைத்துள்ளதை சுட்டிக்காட்டினேன், வண்டியை தேவையான போது வளைக்க நேர்ந்தால் குழந்தைகளின் கால்கள் இடிபடும். இதனால்தான் பல விபத்துகள் நிகழ்கின்றன. இது குறித்து அவருக்கு நான் சொன்ன போது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே முனுமுனுத்துக் கொண்டார் என்றார்.

அதுமட்டுமில்லாமல், அவரும் தலைக்கவசம் அணியவில்லை. வாகனத்தில் இருந்த யாருக்கும் தலைக்கவசம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சாலைப் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஷுப் குமார், சாலை விபத்தில் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களை அழைத்து வந்து பேட்டி கொடுக்கச் சொல்கிறோம். விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர் இறந்ததால், தங்கள் வாழ்க்கை எப்படி மாறிப் போனது என்பது குறித்தும் விளக்கச் சொல்கிறோம். ஆனாலும் சிலர் அதைக் கண்டுகொள்வதில்லை. அப்போதுதான் உளைச்சல் ஏற்படும் என்கிறார்.

திருந்துவார்களா? தெரியவில்லை, அபராதம் விதித்தும் திருத்த முடியாதவர்களை அன்பால் திருத்த முற்பட்ட இந்த அதிகாரி பாராட்டப்படவேண்டியவரே….!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *