Monday, October 23, 2017

.
Breaking News

நாமல் உள்ளிட்ட 3 எம்.பிக்கள் கைது – 16 ம் திகதி வரை விளக்கமறியல்!

நாமல் உள்ளிட்ட 3 எம்.பிக்கள் கைது – 16 ம் திகதி வரை விளக்கமறியல்!

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாந்தோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்புப்பேரணி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ , டீ.வீ.சானக, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேர் நேற்று மாலை அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ , டீ.வீ. சானக , பிரசன்ன ரணவீர ,மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உபாலி கெடிகார , சம்பத் அதுக்கோரள மற்றும் அஜீத் பிரசன்ன ஆகிய 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த 6 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *