Monday, October 23, 2017

.
Breaking News

ஜெர்மனியில் ஓராயிரம் விடுதலைப் புலிகளா?

ஜெர்மனியில் ஓராயிரம் விடுதலைப் புலிகளா?

ஓராயிரத்திற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தினர் ஜெர்மனியில் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

புலனாய்வு பிரிவினர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விடுதலைப் புலிகள் குறித்த இந்தப் புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த அறிக்கைக்கு ஏற்ப, ஜெர்மனியில் சுமார் 1,000 விடுதலைப் புலிகள் இன்னும் செயற்பாட்டில் உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்து ள்ளனர். உலகில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்கள் உட்பட சுமார் 3,000 பேர் ஜெர்மனியில் இயங்கி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இஸ்லாமிய பயங்கரவாதிகளும் அடங்குவர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜெர்மனியில் சுமார் 29,000 வெளிநாட்டு தீவிரவாதிகள் இருந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவின் அறிக்கை மூலம் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் ஜெர்மனிக்குள் செயற்பாட்டு ரீதியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களின் குறிவைத்துள்ள சில நாடுகளுக்கு பாதிப்பு வரக்கூடும் என்றும்ஜெர்மனிய தேசிய புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

எது எப்படி இருந்தபோதிலும், விடுதலைப் புலிகள், வெளிநாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அமைப்பு அல்ல எனவும், அது குறிப்பிட்ட நாட்டில் மக்களின் உரிமைக்காக போராடும் அமைப்பு எனவும் அனைத்துலக பாதுகாப்பு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *