Monday, October 23, 2017

.
Breaking News

டொனால்டு டிரம்ப்பால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அமெரிக்க ஆளும் கட்சி எம்பி சொல்கிறார்!

டொனால்டு டிரம்ப்பால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அமெரிக்க ஆளும் கட்சி எம்பி சொல்கிறார்!

வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது.

அதுமட்டுமின்றி வடகொரியா ஒரு பலம் வாயந்த ஏவுகணையை தயார்படுத்தி வருவதாகவும், அது எப்போது வேண்டும் என்றாலும் சோதனை செய்யப்படலாம் என, வடகொரியா சென்று திரும்பிய ரஷ்யா எம்.பி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவேன், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பில்லை, இராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வு என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இப்படி இருநாடுகளுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சியின் மூத்த எம்.பி. பாப் கார்கர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பயிற்சி ஜனாதிபதி போல் செயல்படுகிறார்.ஏதோ, ரியாலிட்டி ஷோவில் பேசுவது போல் டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை குறிப்பிட்டு வருகிறார்.

டிரம்பின் இந்த விதண்டாவாத கருத்துக்களால் மூன்றாம் உலகப்போர் நிகழ்வதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *