Tuesday, October 24, 2017

.
Breaking News

இது எங்கள் ஜிமிக்கி கம்மல்!… சங்கர சுப்பிரமணியன்.

இது எங்கள் ஜிமிக்கி கம்மல்!…  சங்கர சுப்பிரமணியன்.

அதுதான் அவள் ஜிமிக்கி கம்மல்

அவள் அழகதை கூட்டிக் காட்டும்
அற்புதமே அவள் ஜிமிக்கி கம்மல்
இதுதான் இவள் ஜிமிக்கி கம்மல்
இவள் எழிலை ஏற்றிக் காட்டும்
ஈடில்லாததே அந்த ஜிமிக்கி கம்மல்
மாமன் மகள் காதினிலே மாட்டியது
மச்சானை வாவென்றே கூப்பிட்டது
அசைந்தசைந்து அவள் காதிலாட
இசைத்தது நெஞ்சம் இனிய கீதம்
வட்ட வட்ட அவள் ஜிமிக்கி கம்மல்
கிட்ட கிட்ட அவள் நெருங்கையிலே
தொட்டுதொட்டு பார்க்க சொல்லும்
கிட்டச் சென்று  பார்க்க சென்றால்
தொட்டவளை அணைக்க தூண்டும்
சிங்காரியின் சிவத்த ஜமிக்கி கம்மல்
மங்காமல் மின்னும் ஜிமிக்கி கம்மல்
தங்கத்தால் செய்த ஜிமிக்கி கம்மல்
எங்களது பரம்பரை ஜிமிக்கி கம்மல்
தங்கத் தமிழச்சியர் காதில் ஆடும்
பொங்கி வரும் பேரழகு ஜிமிக்கி கம்மல்
எங்கள் இல்லமதில் வளையவரும்
மங்கையர் காதிலாடும் ஜிமிக்கி கம்மல்
வாங்க  எங்கள் தங்கப் பெண்னினமே
நீங்கள் தான் எங்கள் குலவிளக்காம்
பூங்காவில் பூத்த புதுமலர்போல்
நீங்கா புகழ் நீவிர்தாம் எம்வாழ்வில்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *