Sunday, January 21, 2018

.
Breaking News

கல்…புல்…காகம்?… 1 … ( நாவல் ) …. சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்?… 1 … ( நாவல் ) ….  சங்கர சுப்பிரமணியன்.
திண்டுக்கல் அரசு பள்ளியில் விஞ்ஞாம் பயிற்றுவிக்கும் ஆசிரியையாக பணியாற்றி வந்தாள்
விமலா. வயது இருபத்துஐந்து ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமலும் பெற்றோர்களுக்கு
பிடிகொடுக்காமல் இருந்து வந்தாள். கடந்த ஆறு மாதங்களாக அவள் போக்கில் ஒரு மாற்றம்
தெரியத் தொடங்கியது. பெற்றோரின் திருமணப்பேச்சுக்கு செவிசாய்க்காமல் இருந்தவள்
இப்போது பெற்றோர் திருமணப்பேச்செடுத்தால் அவள் முகம் நாணத்தால் சிவக்க ஆரம்பித்தது.
இதனால் பெற்றோரும் மகளுக்கு மாப்பிள்ளை தேடலாம் என்ற எண்ணத்தில் மகிழத் தொடங்கினர்.
“செங்கமலம், விமலாவிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனித்தாயா?” அப்பா பரமசிவம் கேட்டார்.
“ஆமாங்க, நானும் கவனித்தேன். திருமணப் பேச்செடுத்தாலே எங்கோ யாரோ  யாரிடமோ
எதையோ கேட்பதுபோல் கண்டுகொள்ளாமல் இருப்பவள் இப்போது திருமணப் பேச்செடுத்தாலே
அந்திவானம் போல் அவள் முகம் சிவப்பதைக் காணமுடிகிறது” பதிலளித்தாள் அம்மா உமா.
“நல்ல காலம் பிறந்துவிட்டது என்று நினைக்கிறேன். திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்தில்
ஏறுவதற்குமுன் சட்டுபுட்டென்று செயலில் இறங்கிவிடவேண்டும்”
“சரியாத்தான் சொன்னீங்க. நம்ம விளாங்குடி சோசியரிடமும் ஒருதடவை போய் கேட்டுடலாம்”
பெற்றோர்கள் மனநிலையை உணர்ந்தவள் இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்பதையும்
மறக்கவில்லை. அவளிடம் இம்மாற்றம் உருவாகக் காரணம் மனோகரன் தான். கடந்த வருடம்
அவள் பணிபுரியும் அதேபள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக சேர்ந்தவன் படிப்படியாக விமலாவின்
மனத்தில் இடம்பிடிக்க சாதாரணமாக இருந்த நட்பு இறுகியதால் இருவருக்கும் இடையேயிருந்த
இடைவெளி குறைந்து சிலசமயங்களில் காற்றுப்புகமுடியாத அளவுக்கு சென்றதால் நட்பு
உருமாறி காதலாக மாறியது. தனது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்குவதற்குமுன்
மனோவிடம் சொல்லிவிடவேண்டும் என்று முடிவுக்கு வந்தவள் மனோவிடம் அன்று பள்ளி
முடிந்ததும் சற்று பேசவேண்டுமென்று சொல்லி காத்திருக்கச் சொன்னாள். பள்ளி முடிந்ததும்
உடற்பயிற்சி ஆசியர் அறைக்குசெல்ல அங்கு அவள் வருகைக்காக கத்திருந்தான் மனோகரன்.
வகுப்பு இல்லாத நேரங்களில் விமலா மனோவைத்தேடி அவன் அறைக்கு செல்வதும் அதேபோல்
உடற்பயிற்சி இல்லாதபோது மனோ விமலாவைதேடி வருவதையும் ஆரம்பத்தில் யாரும் பெரிதாகக்
கண்டுகொள்ளவில்லை. ஆனால் எதுவும் அளவுக்குமீறி செல்லும்போது அதை மற்றவர்களின்
பார்வையிலிருந்து தவிர்த்து விடமுடியாதல்லவா? அதேபோல் இருவரும் ஒருவரை அடிக்கடி
சந்தித்து பேசுவதும் பேச்சோடு நிற்காமல் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து சிரித்து மகிழ்வதும்
மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
தன் அறைக்கு வந்தவளை வரவேற்று இருக்கையில் அமரவைத்தான். அவளையே உற்றுப்பார்த்துக்
கொண்டிருந்தவனை போதும் போதும் பார்த்தது என்ன விசயம் என்று கேட்கமாட்டீர்களா என்று
கேட்டவளின் அருகே சென்றான்.  பின் சற்று குனிந்தவன் இரு கரங்களாலும் அவள் முகத்தை தன்
உள்ளங்கைகளில் ஏந்தி உதடுகளை அவள் கன்னத்தருகே கொண்டு சென்றவனின் காதை பிடித்து
திருகினாள் விமலா. அடி பாவி இனிப்பு கொடுக்க வந்தவனுக்கு இப்படியா காரத்தைக் கொடுப்பார்கள்
என்று சொன்னபடியே அவளின் கன்னத்தருகே சென்ற உதடுகளுக்கு விடுதலை கொடுத்தவன் கை
விரல்களுக்கு வேலை கொடுக்க அவன் விரல்கள் அவள் விரல்களைத் தட்டிவிட்டு காதுமடலைத்
தடவிக் கொடுத்தன.
“விமலா, வர வர உன் சேட்டைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அப்பப்பா காதே வலிக்கிறது.
நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உனது காதலன் என்று நினைத்தாயா? அல்லது
உன்னிடம் பயிலும் மாணவன் என்று நினைத்தாயா? இப்படியா கதைப்பிடித்து திருகுவாய். ரெம்பவே
வலிக்குது. இந்த வலிக்காகவாவது என் உதடுகளுக்கு பரிசு கொடுக்கலாமல்லவா?”
“ஆம். கொடுக்கலாம் கொடுக்கலாம். உதடுகளுக்கு பரிசு கொடுத்தால் அத்தோடு நின்றிடுமா? அடுத்து
உங்கள் கைகள் பரிசு கேட்கும். ஆசையைப்பார். கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீர்களா? பேசவேண்டும்
என்று காத்திருக்கச் சொன்னாளே. அது என்னவாய் இருக்கும் என்றெல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப்
பார்க்காமல் ஆள் வந்தவுடன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டீர்களே” என்று கடிந்து கொண்டாள்.
“அடடே, நீ என்ன சொன்னாய், எதற்கு வந்தாய் என்பதையே மறந்துவிட்டேனே! என்ன செய்வது உன்னை
பார்த்து விட்டால் உலகமே மறந்து விடுகிறது. அந்த பழைய பாடல்தான் நினைவுக்கு வருகிறது”
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்,

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *