Tuesday, October 24, 2017

.
Breaking News

வடதுருவம் தென் துருவம்!… ஏலையா க.முருகதாசன்.

வடதுருவம் தென் துருவம்!… ஏலையா க.முருகதாசன்.

நண்பா!

உன் பெயரைச் சொல்லி விளிக்கவில்லை

ஆனால்

உன்னைத்தான் நண்பா !

உனக்கும் எனக்கும் ஒத்த கருத்துக்கள்

எதுவுமில்லை எதிலுமில்லை

அப்ப

எப்படி இந்த நட்பு சாத்தியமானது

கத்தரிக்;காயை

பொரித்து வைத்த குழம்பு உனக்கு பிடிக்கும்

அது

எனக்கு பிடிக்கவே பிடிக்காது

முருங்கைக்காய், வெண்டிக்காய், பருப்பு, கீரை

இவை எதுவுமே உனக்குப் பிடிக்காது

ஆனால்

அவையெல்லாம் எனக்குப் பிடிக்கும்

குளைந்த சோறு உனக்குப் பிடிக்கும்

அது

எனக்குப் பிடிக்கவே பிடிக்காது – சோறு

பொலபொலவென்று இருக்க வேண்டும்

ஆடடுறைச்சிக் கறிக்கு வாயூறுவாய் நீ

அறவே பிடிக்காது எனக்கு இந்த இறைச்சி

திரைப்படமும் பிடிக்காது

தொலைக்காட்சி நாடகமும்

உனக்குப் பிடிக்காது

எனக்கு

திரைப்படமும் பிடிக்கும்;

தொலைக்காட்சி நாடகங்களும் பிடிக்கும்

அதிக விலை கொடுத்து நுழைவிதழ் வாங்கி

ஒருக்களித்து ஒரு கையில் கோப்பியை உறிஞ்சியபடி

அகலத் திரையில் திரைப்படம் பார்க்க

அலாதியாக பிடிக்கும்…பிடிக்கும் எனக்கு

காதல் கல்யாணங்களை

வெறுப்பவன் நீ

எதிர்ப்பவன் நீ

காதலர்களுக்கு கைகொடுப்பவன் நான்

காமம் வாழ்வின் முக்கியம் என்பேன் நான்

சீ….. அது மலத்திற்கு சமம் என்பாய் நீ

அரசியலில் நீ வடதுருவம்

நான் தென் துருவம்

நானும் நீயும் ஒன்றாக

ஒரு இடத்தில் இருக்கும் நேரங்களில்

அங்கு அமைதி இருக்காது

அமைதியான கலந்துரையாடல் இருக்காது

சூடான விவாதம் இருக்கும்

நீ விதண்டாவாதம் செய்கிறாய் என்பாய்

நீ விதண்டாவாதம் செய்கிறாய் என்பேன் நான்

முட்டாள் என்பாய் என்னை நீ

உன்னை நான் மடையன் என்பேன்

எனக்கும் உனக்கும் இடையில்

ஒத்த கருத்துக்கள் இல்லை

ஒத்துப் போவதுமில்லை விட்டுக் கொடுப்பதுமில்லை

ஒத்த குணங்களுமில்லை

நண்பர்களாக இருக்கிறோமே

எப்படி?

இன்றுவரை அதுதான் புரியவில்லை !

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *