Thursday, December 14, 2017

.
Breaking News

தமிழ்ச் சட்டத்தரணிகளே! மெளனம் காப்பது முறையோ.

தமிழ்ச் சட்டத்தரணிகளே! மெளனம் காப்பது முறையோ.
கோவலனைக் கள்வன் என்று குற்றம் சாட்டி அவனுக்கு மரண தண்டனை விதிக் கப்பட்ட செய்தியறிந்த கண்ணகி வீறுகொண்டு எழுகிறாள்.
பாண்டிய மன்னனின் அரண்மனை நோக் கிச் செல்கிறாள். யார் கள்வன்! என் கணவன் கள்வனா! கண்ணகியின் எழுவீச்சில் பாண் டிய மன்னன் பதறிப் போனான்.
தன் கணவன் கள்வன் அல்ல என்பதை கண்ணகி நிரூபித்த போது, மன்னன் பாண்டி யன் நிலத்திடை வீழ்ந்து உயிர்துறந்து போகி றான். பாண்டிமாதேவி உயிர் துறக்கிறார். நாடு பற்றி எரிகிறது.
அட! இப்படியயல்லாம் நடப்பது நியாயமா? கண்ணகி செய்தது நீதியா? என்று கேட்பவர் கள் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கவே செய்வர்.
ஆனால் பாண்டிய நாட்டை கண்ணகி எரித்தாள் என்பதை விட, ஒரு நிரபராதி கொலை செய்யப்பட்ட அதர்மத்தால் பாண்டிய நாடு எரிந்தது என்று சொல்வதே பொருத்துடையது.
ஆம், பாண்டிய மன்னன் தவறான தீர்ப்பை வழங்குகிறான் என்றால்; அதற்கு மகாராணி யும் மந்திரிகளும் அரண்மனை சேவகர்களும் மக்களும் காரணம் என்பதே உண்மை.
தவறான தீர்ப்பு வழங்கினால் மக்கள் தன் னைத் தண்டிப்பர், மந்திரிகள் வெறுப்பர் என்ற பயம் பாண்டிய மன்னனிடம் இருந்திருந்தால், கோவலனைக் கொல்லுமாறு பாண்டியன் தீர்ப்பளித்திருக்க மாட்டான். அந்தத் தீர்ப்பை வழங்கும் முன்னதாக பல தடவைகள் சிந்தித் திருப்பான்.
ஆனால் அந்தச் சிந்தனை இல்லாமல், ஒரு மனித உயிர் என்று நினைக்காமல், கள்வன் என்று கூறியதை அப்படியே செவிமடுத்து அவனைக் கொன்று விடு என்று கூறுகிறான் எனில், அந்தக் குற்றத்துக்கு பாண்டிய நாட்ட வர்களும் காரணம்.
இதனால்தான் பாண்டிய நாட்டை கண்ணகி எரியூட்டினாள். தர்மம் பிழைத்தால், நீதி தவறி னால் அதைப் பார்த்திருந்தவர்களும் தண்ட னைக்குரியவர்கள் என்பதை நிரூபிக்கவே கண்ணகி கற்பெனும் அக்கினியால் பாண்டிய நாட்டை தீயிட்டாள் எனலாம்.
ஆக, அநீதி, அக்கிரமம், பொய், அதர்மம் எனும் பாவங்கள் அரங்கேறும் போதெல்லாம் அதைப் பார்த்திருப்பதும் பெரும் பாவம் என் பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
எனவே, மரியாதைக்குரிய தமிழ்ச் சட்டத் தரணிகளே! ஒரு காலத்தில் தமிழ்ச் சட்டத்தரணி கள்தான் தமிழர்களின் அரசியல் உரிமை களை உலகறியச் சொன்னார்கள். பாராளு மன்றத்தில் வலியுறுத்திப் பேசினார்கள். அந்த உயர்ந்த கலாசாரம் மீண்டும் பிறப்பெடுக்கட்டும்.
அரசியலமைப்புச் சீர்திருத்த இடைக்கால வரைபு வெளிவந்திருக்கும் இவ்வேளையில் அதன்மீது உங்கள் நிபுணத்துவம் ஊடுருவிப் பாயட்டும்.
தமிழ் மக்களுக்கு, அவர்கள் சந்தித்த இழப் புக்களுக்கு, எதிர்காலத்திலும் உரிமை என்று போராடாமல் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வ தற்கு வரைபில் ஏதாவது உண்டா?
எதுவாக இருந்தாலும் நீங்கள் அனை வரும் ஒன்றுகூடி நிறுதிட்டமாக முடிவெடுத்து உங்கள் முடிவை அறிவியுங்கள்.
இந்தப்பணியை தமிழ் மக்களின் பெயரால் செய்வீர்கள் என நம்புகின்றோம். தயவுசெய்து மெளனம் கலையுங்கள்.
வலம்புரி

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *