Friday, February 23, 2018

.
Breaking News

சிங்கப்பூரில் இந்திய பெண் டாக்டருக்கு உயரிய விருது!

சிங்கப்பூரில் இந்திய பெண் டாக்டருக்கு உயரிய விருது!

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய டாக்டரான உமா ராஜன், அங்கு பல்வேறு மருத்துவமனைகள், குழந்தைகள் நல மையங்கள் உருவாக்கி சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரை துணைத்தலைவராக கொண்டு இயங்கி வரும் சிக்லப் தென் சமூக மையம், 10 முதியோர் இல்லங்களை உருவாக்கியதுடன், பல்வேறு தொண்டுகளையும் செய்து வருகிறது.

இவரை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூரில் வாழும் இந்திய சமூகங்கள் இணைந்து ‘சமூக சாம்பியன்’ விருதை டாக்டர் உமா ராஜனுக்கு வழங்கி உள்ளது. இந்த விருதை சிங்கப்பூர் சட்டம் மற்றும் கல்விக்கான இணை மந்திரி இந்திராணி ராஜா வழங்கினார்.

இந்த விருதை பெறும் முதல் பெண்மணி, டாக்டர் உமா ராஜன் ஆவார். இதுகுறித்து அவர் கூறும்போது, இந்த விருது மூலம் பெண்களும் சமூக சேவகர்களாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.

About The Author

Related posts