Tuesday, October 24, 2017

.
Breaking News

தமிழர்களின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டிய சம்பந்தன் அரசின் பிரதிநிதியாகச் செயற்படுகின்றார்!

தமிழர்களின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டிய சம்பந்தன் அரசின் பிரதிநிதியாகச் செயற்படுகின்றார்!

தமிழ் மக்களின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டிய சம்பந்தன்; அரசாங்கத்தின் பிரதிநிதியாகவல்லவா செயற்படுகின்றார். அவ்வாறெனில் எவ்வாறு நான் சம்பந்தனுக்கு ஒத்துழைப்பு வழங்குவது? எனவும்கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம் உட்பட நாட்டின் முக்கிய பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் உதவி தேவைப்படுகின்றது. அவருடன் பேசிக்கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து பேசுவோம்’ என அண்மையில் தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இது தொடரபாக கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ, தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் அம்மக்களின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர்.

தேர்தல்களை ஒத்திவைக்க இவர்கள் அரசாங்கத்துக்கு துணை போகின்றனர். இது மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இவர்கள் இவ்வாறு நடந்துகொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.

இவ்வாறு செய்துகொண்டு என்னிடம் உதவியை எதிர்பார்த்தால் நான் எவ்வாறு செய்வது? சம்பந்தன் என்னிடம் பேசும்போது இந்த அரசின் சார்பாக பேசுவதுபோலல்லவா பேசுகின்றார்.

அவர் தமிழ் மக்கள் பிரதிநிதிபோல் நடந்துகொண்டால் அவருடன் பேசுவது பற்றித் தீர்மானிக்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *