Tuesday, October 24, 2017

.
Breaking News

“யுத்தம் முடிந்து விட்ட போதும் வெறுப்புக்கும் பாரபட்சத்துக்கும் உள்ளாகின்றனர் — ஐ. நா வதிவிட இணைப்பாளர் உனா மக்கிளே!

“யுத்தம் முடிந்து விட்ட போதும் வெறுப்புக்கும் பாரபட்சத்துக்கும் உள்ளாகின்றனர் — ஐ. நா வதிவிட இணைப்பாளர் உனா மக்கிளே!

“யுத்தம் முடிந்து விட்ட போதும், இலங்கையில் பலர், இன்னும் பாகுபாட்டுக்கும் வெறுப்புக்கும் உள்ளாகுகின்றனர்” என, ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.

நேற்று (21) அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச சமாதான தினத்தைக் குறிக்கும் முகமாக, ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளர் உனா மக்கிளே வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையின் எதிர்காலப் போக்கை வழிப்படுத்தலில், குறிப்பாக சமாதானத்தைக் கட்டியெமுப்புதல் மற்றும் நல்லிணக்கம் என்பவை தொடர்பில், ஒவ்வொருவரும் சமமாகப் பங்கு பெறுவதை உறுதி செய்ய இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

“இலங்கையில் யுத்தம் முடிந்துவிட்டது. ஆயினும், பலர் இன்னும் வெறுப்புக்கும் பாரபட்சத்துக்கும் உள்ளாகின்றனர். நிலையானதொரு சமாதானத்துக்காக இணைந்து வேலை ​செய்ய இன்னும் வாய்ப்புள்ளது.

“சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும் நல்லிணக்கத்திலும், ஒவ்வொருவரும் சமமாகப் பங்கு பெறுவது உறுதி செய்யப்பட, இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளன. நாம் மற்றவரின் சமயம், இனம், கலாசாரம், அரசியல் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்.

“நாம் முன்னேற்றப்பாதையில் செல்ல, மற்றவர்களின் வித்தியாசமான இயல்புகள் அம்சங்களை ஏற்று வேலை செய்வது அவசியம். பாகுபாடு காட்டல், சகிப்புத்தன்மை இன்மை, சமத்துவமின்மை என்பவை ஊக்குவிக்கப்பட்டால் அல்லது அவற்றைக் கவனியாது விடின் எமது முயற்சிகள் வீணாகும்” என அவர் கூறினார்.

“அநீதிக்கு எதிராக நிற்றல் என்பது, நாம் எமது சமூகத்தினுள் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் பலவீனமான மக்கள் தொடர்பில் சொல்லிலும் செயலிலும் அன்பானவர்களாக இருக்க வேண்டும்.

“எமது பாதுகாப்பையும் புரிந்து கொள்ளலையும் நாடி வருவோருக்கு, எம்மால் நம்பிக்கை ஊட்ட முடியும். அப்படியிருந்தால் மட்டுமே நாம், எல்லோருக்கும் மரியாதை, பாதுகாப்பு, கௌரவம் என்பவற்றை உறுதி செய்ய சேர்ந்து வேலை செய்கின்றோம் என்று கூற முடியும்.

“ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 21இல், சர்வதேச சமாதான தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. சகல மக்கள் மற்றும் நாடுகள் உள்ளேயும் இடையேயும் சமாதான இலட்சியங்களைப் பலப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட தினமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இத்தினத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

“இவ்வருடத்துக்கான கருப்பொருள், ‘சமாதானத்துக்காக ஒன்றாக: யாவருக்கும் மரியாதை, பாதுகாப்பு, கௌரவம்’ என்பதாகும். இங்கு அகதிகள், புலம் பெயர்ந்தோர் ஆகியோரின் நிலைமை மீது, குறிப்பான கவனம் கோரப்படுகிறது.

“அவர்களது துயரங்கள் நாம் எவ்வளவு விரைவாக தீர்வுகளை காண வேண்டும் எனவும் சகலருக்கும் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் காட்டுகிறது.

“சர்வதேச சமாதான தினத்தில் நீதி மறுப்பு மற்றும் பாகுபாடுகாட்டலால் துன்பப்படும் அகதிகள் மற்றும் ஆபத்துக்கு முகம் கொடுத்தவாறு வாழும் புலம்பெயர்ந்தோர் பற்றிச் சிந்திக்கவேண்டும்.

“இலங்கையில் நிலைத்த சமாதானத்துக்காக வேலை செய்கையில், வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்​மை இன்மை என்பவை ஏற்கப்படாத ஒரு நிலைமையை உருவாக்க நாம் யாவரும் எம்மால் முடிந்த அளவுக்கு உழைப்போம்” என, ஒனா மக்கிளே கூறினார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *