Wednesday, November 22, 2017

.
Breaking News

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டம் – மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டம் – மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டம் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதாவது நூற்றுப் பதினொரு மேலதிக வாக்குகளினால் பாராளு மன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்ட மூலத்துக்காக நூற்று ஐம்பத்து நான்கு வாக்குகள் ஆதரவாகவும் எதிராக நாற்பத்து மூன்று வாக்கு களும் அளிக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் 111 மேலதிக வாக்குகளினால் நேற்று இரவு 8.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் நிறை வேற் றப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த திருத்தச் சட்ட மூலம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இச்சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பு நேற்று இரவு 6.30 மணிக்கு நடைபெற வேண்டிய நிலையில் இருந்தும், இரவு 8.00 மணி வரை அது தள்ளிப் போடப்பட்டமைக்கு கூட்டு எதிர்க்கட்சியினர் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து, மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தைக் காட்டுவதற்கே இவ்வாறு வாக்கெடுப்பைத் தள்ளிப்போட்டதாகவும் கூட்டு எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *