Monday, October 23, 2017

.
Breaking News

மருத்துவர் பொன்னையா சத்தியநாதன்!

மருத்துவர் பொன்னையா சத்தியநாதன்!

தோற்றம் : 17 – 11 – 1948. பொன்னையா சத்தியநாதன். மறைவு: 15 – 09 -2017.

தமிழினத்தின் விடுதலைக்காகவும் தமிழ்மொழிக் காப்புக்காகவும் அயராது உழைத்துவந்தவரும்,
ஈழத்தில் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஒஸ்ரேலியா மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட
மருத்துவர் பொன்னையா சத்தியநாதன் கடந்த வெள்ளிக்கிழமை (15-09-2017) இரவு இறைபதம்
எய்தினார்.
அன்னார் வைத்தியக் கலாநிதி மேரி தேவாநளாயினியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற
வீரகத்தி சார்ள்ஸ் பொன்னையா, அலிஸ் பூரணம் பொன்னையா தம்பதிகளின் அன்பு மகனும்
ஆவார். அன்னார் அன்னலோஜனி வேலுப்பிள்ளை சாமுவேல் (ஓஸ்ரேலியா), மனோகரி
பூரணம்பிள்ளை (ஓஸ்ரேலியா), லோகநாதன்(லண்டன்), ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச்
சகோதரரும் ஆவார்.
தமிழினத்துக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தொண்டாற்றிய இவர் பழ.நெடுமாறன் அவர்களைத்
தலைமையாகக்கொண்ட உலகத்தமிழர் பேரவையின் துணைத்தலைவராகவும், ஓஸ்ரேலியாவில்
விக்டோரிய ஈழத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் விளங்கினார்.
தமிழ்ச் சமூகத்தின் ஈடேற்றத்துக்காக முழுமூச்சாக உழைத்து ஓய்ந்த அன்னாரின் இறுதிவணக்க

நிகழ்வுகள் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.பகல்10:00மணிமுதல் நண்பகல் 12:0 மணிவரை  Preston Town Hall, 284 Gower St, Preston, Vic 3072
எனும் முகவரியில் நடைபெற
ஏற்பாடாகியுள்ளது. தமிழினத்துக்காவே வாழ்ந்து மடிந்த இந்த உன்னதமனிதரின் இறுதிநிகழ்வில்
தமிழ்மக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிற Pர்கள்.
குறிப்பு:- மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்களின் உடல் மக்கள் பார்வைக்காக 10 to 10.30
நேரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்.
வாகனங்கள் தரிப்பதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே மண்டபத்துக்கு
வருகிறவர்கள் இதுகுறித்துக் கரிசனை கொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள். பொதுப்போக்கு
வரத்து பயன்படுத்துகிறவர்களுக்கு Preston train Station, Gower St stop for Tram-86 ஆகியன
நடந்துவரும் தூரத்துக்குரியன.
குறிப்பு: உடல் நல்லடக்கம் செய்யப்படும் நிகழ்வு குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுப் படுத்தப்-
பட்டுள்ளது. இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தவர் சார்பில் திருமதி மேரி சத்தியாநாதன் – 0488 029 449

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *