Wednesday, November 22, 2017

.
Breaking News

மீண்டுமொருமுறை தீட்டுவேன்!.. சங்கர சுப்பிரமணியன்.

மீண்டுமொருமுறை தீட்டுவேன்!..  சங்கர சுப்பிரமணியன்.

வண்ணக்கலவை கொண்டு வரைந்தேன் ஒவியத்தை

ஓவியம் சொன்னதுவோ உண்மை ஒன்றை உக்கிரமாய்
ஏழ்மையின் சிகரமாய் என்கண்ணில் தெரிகின்றாள்
எதையோ எதிர்பார்த்து கிடைக்குமென்று காத்திருந்து
கிடைக்காமல் போனதினால் ஏமாற்றத்தால் தனை இழந்து
விரக்தி தந்த வேதனையால் வெறித்து நோக்கும் அப்பார்வை
உலகைவிட்டு போய்விடுவோம் என்ற உண்மை தெரிந்ததாலோ
சோகத்தின் சுமையை கண்கள் சுமந்து நிற்க கண்டேன்
இந்த சமுதாயச் சந்தையிலே கையில் பணம் உள்ளவர்க்கே
வேண்டியது கிடைக்குமென விபரம் அறியா வெறுமை
அவள் கண்களிர் நிதர்சனமாய் மிகவும் நன்றே தெரிகின்றதே
அது கண்டு அடக்கவொண்ணா துயரத்தில்  என்கண்கள் சொரிகிறதே
சொரிந்த கண்ணீரை துடைத்து விட்டு மீண்டுமொருமுறை நோக்க
சொல்லிற்று ஒருபதிலை சூட்சுமமாய் அவள் கண்கள்
நான் போனாலென்ன நாட்டில் என்போன்றோர் ஏராளம் என்று
சொல்லாமல் சொல்லி சூளுரைக்கும் திண்மை கண்டேன்
சூதான சதியொழித்து சுதந்திரமாய் தம்வழிகாண
சேர்ந்தே சமர் செய்வார் செவ்வனே செய்யும் அவர் செயலால்
ஆர்த்தெழுந்தே அவர் செய்யும் அனைத்துமே வெற்றிபெரும்
அப்போது மீண்டுமொரு வண்ணம் தீட்டிடுவேன் நான்
சோகம் சுமந்து நிற்கும் அக்கண்கள் மகிழ்ந்து பூத்திருக்கும்
தான்தேடி கிடைக்காத தவமான தவமதுவும் தம்போன்றோர் பெறக்கண்டே!..

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *