Thursday, December 14, 2017

.
Breaking News

இளவரசரை விமர்சிப்பதா? சவுதி அரசின் தொடரும் அடக்குமுறை!

இளவரசரை விமர்சிப்பதா? சவுதி அரசின்  தொடரும் அடக்குமுறை!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவுதி அரேபியாவில் மதக் குருமார்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்று கூடச் சவுதி அரசு அறிவிக்கவில்லை. உலகம் முழுவதும் இது தொடர்பான விவாதம் கிளம்பவே, நாட்டின் பாதுகாப்புக்காக என்று கூறியுள்ளது சவுதி அரசு.

சவுதி அரேபியா மன்னர் சல்மான், சமீபத்தில் பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயீப்பை அப்பதவியில் இருந்து நீக்கினார். புதிய பட்டத்து இளவரசராக, தன்னுடைய மகன் முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டார். மேலும், முகமது பின் சல்மானுக்குத் துணை பிரதமர் பதவியும் அளிக்கப்பட்டது. தற்போது, சவுதியில் துணை பிரதமர் சொல்வதுதான் சட்டம் என்ற நிலை உள்ளது. இதைப் பலரும் விமர்சனம் செய்தனர். இப்படி, விமர்சனம் செய்தவர்களைச் சவுதி போலீஸ் வீடு புகுந்து கைது செய்துள்ளது. இவர்கள் தங்கள் சோஷியல்மீடியா பக்கத்தில் துடிப்பாக இருப்பவர்கள் என்று கூறப்படுகிறது.

அப்துல்லா அல் மாலிக் என்ற கல்வியாளர் சவுதியில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். எஸ்ஸாம் அல் சமீல் என்ற தொழிலதிபர் பொருளாதாரச் சீர்திருத்தம் வேண்டும் என்று சொல்லியிருந்தார். சோஷியல் மீடியா பக்கத்தில் 1.4 கோடி ஃபாலோயர்ஸ் கொண்டிருந்த ஷேக் சல்மான் அல் அவ்தா, இஸ்லாமிய சட்டத்துக்குட்பட்டு மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இதைப்போன்ற கருத்துக்களை தெரிவித்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக, வெளிநாட்டு அமைப்புக்களுடன் சதி செய்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், என்ன செய்தார்கள், எத்தனைப் பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதன்மூலம், தங்கள் கருத்துக்களை வெளியே சொல்வதைக் கூடச் சவுதி அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று மத்திய கிழக்கு நாடுகளைக் கண்காணித்துவரும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முகமது பின் சல்மான் பதவி ஏற்ற பிறகு சவுதி அரேபியால் அடக்குமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் பலர் தற்போது சிறையில்தான் உள்ளனர். இவர்கள் மீது, நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படாமல் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *