Friday, July 28, 2017

.
Breaking News

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி ரெயில் மறியல் போராட்டம்

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி ரெயில் மறியல் போராட்டம்

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் வேல்முருகன் அறிவித்து இருந்தார்.

அதன்படி சென்னை சென்ட்ரலில் காலை 11.30 மணிக்கு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். 3–வது பிளாட்பாரத்தில் புறப்பட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் நின்று மறியல் செய்தனர். போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோஷம் எழுப்பினார்கள்.7a1ea47c-6931-449a-934a-8b3e71ceedab_S_secvpf

அரைமணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

திருவள்ளூர் செந்தில் குமார், பொருளாளர் அக்ரம்கான், மகளிர் அணி வெள்ளையம்மாள், நிர்வாகிகள் வாசுதேவன், முத்து ராஜ், அப்துல் சபீர், செல்வம், கிஷோர், வீரராகவன், கண்ணன், வசந்த், மேகவண்ணன், குணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உடனே ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டு கொண்டிதோப்பு சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர்.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறியிலில் ஈடுபட்டு கைதானார்கள்.

About The Author

Related posts