Wednesday, November 22, 2017

.
Breaking News

மகிழ்வுடனே வாழ்கின்றனரே!… சங்கர சுப்பிரமணியன்.

மகிழ்வுடனே வாழ்கின்றனரே!… சங்கர சுப்பிரமணியன்.

பகவான் திருமாலோ பலவகையில்

அவதாரம் எடுத்து நின்றான்
ஒவ்வொரு அவதாரமும் உணர்த்தியதாம் உண்மைத்தத்துவத்தை
ஆதலினாலன்றோ அவதாரத்தை எல்லாம் ஆலயமெடுத்து வணங்கி நின்றார் மானிடரும்
ராமனென்றும் கிருஷ்ணன் என்றும் எடுத்த அவதாரங்களுக்கு ஆலயங்களுண்டு
சிம்மமாய் வந்த நரசிம்மமூர்த்திக்கும்
இங்கு கோவிலுண்டு
மனிதருக்குள்ளேயுமிங்கு ஏற்ற தாழ்வு இருப்பதுபோல்
ஏற்ற அவதாரங்களிலும் ஏற்ற தாழ்வு இருத்தல் நன்றோ
ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் கோவில் என்றால்
அது அவர் மானிட அவதாரம் எடுத்ததாலன்றோ
நரசிம்மமூர்த்திக்கு கோவிலென்றால்
அதற்கு அவர் சீறிப்பாயும் குணமன்றோ
அப்படி இல்லையெனில் இங்கே
ஏன் பகவானின் அவதாரங்களான
மீனுக்கும் ஆமைக்கும் பன்றிக்கும்
பாரினில் எங்கும் கோவிலில்லை
மனித அவதாரங்களுக்கு ஒரு நீதி
சீறிப்பாயும் சிங்கத்துக்கும் ஒரு நீதி
என்று பல நீதி இங்கு கண்டதேனோ
பசுவுக்கு நீதிசொன்ன மனு நீதியுமிங்கே
பன்றிக்கு நீதிசொல்லாது பாராமுகமாய் இருந்ததேனோ
சிம்ம அவதாரத்துக்கு கோவில்கண்டு
சிறப்புடனே வணங்கும் இனம்
பன்றி அவதாரத்துக்கு கோவில்செய்து
பார்போற்ற வாழாது போயிடினும்
பரிதவிக்க கொன்றதனை பரவசமாய்
உண்டு வாழ்வதுவும் எந்த நீதி
மீன் அவதாரமதை மேன்மைசெய்து
தொழாது போயிடினும் பரவாயில்லை
மிக்க சத்தான உணவென்று சட்டியிலிட்டு சமைத்துண்ணல் எந்த நீதி
ஆதலினால் மானிடரே ஆண்டவன் அவதாரமெடுத்த
அவன் அவதாரங்களுக்கே இக்கதியெனில்
பொருளாதாரத்திலும் ஏனையவற்றிலும் நலிந்தவர்தனை
ஏறிமிதிப்பதில் தவறில்லை என்று
மகிழ்வுடனே வாழ்கின்றனரே மனிதரிங்கு

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *