Tuesday, October 24, 2017

.
Breaking News

கிரகப்போர் ..பகுதி 11… காசியரின் பேரன்.

கிரகப்போர் ..பகுதி 11… காசியரின் பேரன்.

நண்டுமுக மனிதர்களின்;தலைவனைப் பார்ப்பதற்காக சாமியையும் சுந்தரியையும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

முன்பு அவர்கள் பார்த்தது போலவே ஆங்காங்கு நீலநிறத்தில் பெருங்கூடாரங்கள் இருந்தன.பூமியிலிருந்த போது பிராணவாயுவைச் சுவாசித்த சாமிக்கும் சுந்தரிக்கும் நண்டுக் கிரகத்திலிருக்கும் காற்றைச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவில்லை.ஆனால் அது பிராணவாயு என்று சொல்லப்படுகின்ற ஒக்சிஜன் அல்ல. அது வேறு ஒரு வாயு.அதற்கு நண்டு மனிதர்கள் வைத்த பெயர் சக்சன். ஒக்சிஜனுக்கு முற்றிலும் வேறானது.

சாமியும் சுந்தரியும் இப்பொழுது மூன்றாவது கிரகத்திலிருக்கிறார்கள். மாங்கதிர், அங்கினங்கா, இப்பொழுதிருக்கும் நண்டுங்கா ஆகிய கிரகங்களில் உள்ள வெட்பதட்ப சூழ்நிலைகளினாலும் காற்றின் வேறுபாட்டாலும் பூமியிலிருந்து வந்த போது அவர்களின் உடலுக்குள் இருந்த இதயத்தின் உருவம் போலல்லாது மெதுவாக அதன் வடிவமைப்பு மாறத் தொடங்குகிறது. இரத்தமும் சிவப்பு நிறத்திலிருந்து மாறத் தொடங்குகிறது.

மீண்டும் மாங்கதிர் கிரகத்திற்கே இவர்கள் போய் வாழத் தொடங்கப் போகிறார்கள் என்பதால் இவர்களிருவரும் மாங்கதிர் கிரகத்தில் வாழ ஒப்புக் கொண்டமையால் மாங்கதிர் கிரக விஞ்ஞானிகளால் இவர்களிருவரும் மெதுவாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சில அதிசயங்கள் உண்மையானாலும் அவற்றை மனிதகுலம் நம்ப மறுக்கும். ஆனால் வேற்றுக் கிரகங்களில் உள்ள உயிரினங்கள் சக்தி வாய்ந்தவையாகவும் விஞ்ஞானத்தில் பலவாயிரம் மடங்கு பூமியில் உள்ள விஞ்ஞானிகளைவிட கண்டுபிடிப்புகளில் முன்னேறியவர்கள் என்பதை சாமியும் சுந்தரியும் உணர்கிறார்கள்.

நண்டுக் கிரகத்தின் தலைவன் இருக்கும் நவீன குகைக்கு அழைத்து வந்த நண்டு மனிதர்கள் இருவரும் அவர்களிருவரையும் ஒரு இருக்கையில் உட்கார வைக்கிறார்கள்.சாமிக்கும் சுந்தரிக்கும் மனிதர்களுக்கு இருக்கும் இயல்பான பய உணர்வு இப்பொழுது முற்றிலுமாக இல்லை, அந்த உணர்வைக் கொடுக்கும் மூளைச் செயல்பாடு மாங்கதிர் கிரகத்திலேயே அழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் தாங்களிருவரும் பூமியிலிருந்துதான் வந்தோம் என்ற நினைப்பு அவர்களிடம் இருந்தது. மூளையின் அந்த நினைவுக் கலன்களின் பதிவுகள் அப்படியே இருந்தன.

உட்கார வைக்கப்பட்ட அந்த இருக்கையின் முன்னால் இருந்த திரையில் இருவரின் உள்ளுறுப்புக்கள் தெரியத் தொடங்கின.பூமியிலிருந்த போது அவர்களின் இதயம் மாங்காய் வடிவிலிருந்தது.இப்பொழுது அது வட்ட வடிவமான உருவத்தைக் கொண்டிருந்தது.அதற்குள் ஓடும் இரத்தமும் மஞ்சள் நிறத்தில் இருப்பதைக் கண்டார்கள். அவர்களிருவரினதும் உள் உறுப்புக்கள் இயங்குவதை அவர்கள் பார்த்தார்கள்.

பயமற்ற நிலையினால் அந்தந்த கிரகங்களின் நிலைக்கேற்ப அவர்கள் மாற்றம் பெற்றார்கள்.மாங்கதிர் கிரகத்திற்கு திரும்பிப் போனதும் இவர்களிருவரும் பெரும்பணியை ஒன்றைச் செய்யப் போகிறார்கள் என்பதை சொல்வதற்காகவே நண்டுக் கிரகத் தலைவனை சந்திக்கச் சென்றுள்ளார்கள்.

அவர்களிருவரையும் நவீனமான அறையொன்றில் உட்கார வைத்துவிட்டு நண்டு மனிதர்கள் இருவரும் வெளியே சென்றவுடன் நண்டுக் கிரக தலைவன் மிகவும் மகிழ்ச்சியாக வருக வருக பூவுலக தம்பதிகளே என அழைத்தவாறு அவர்களிருவரின் முன்னாலும் வந்து நின்று தனது இருகைகளையும் கூப்பி வணங்குகிறான்.

பூமியில் இப்படித்தானே வணங்குவார்கள்.இப்படி வணங்குவதில் ஒரு பெரும் தந்துவமே இருக்கின்றது.பூமியில் உள்ள மனிதர்களின் உடலை இயக்குகின்ற இதயத்தின் வடிவிலேயே கூப்பிய கை இருப்பதாலும்,நெஞ்சோடு கையை வைத்து வணங்குவதாலும் எப்பொழுதும் இதயம் தூய்மையாக இருக்க

வேண்டுமென்பதற்காகவே மாங்கதிர் கிரகத்தினால் வணங்குதல் உருவாக்கப்பட்டது.பூமியில் இருக்கும் மனிதர்கள் அறியாமல் எந்தத் தவறையும் விடவில்லை, அறிந்து தவறு விடுகிறார்கள். பலமுறைகள் பல வழிகள் ஊடாக அவர்களுக்கு அவர்கள் விடும் தவறுகள் உணர்தப்பட்டும் அவர்கள் திருந்தவில்லை. இனி மாங்கதிர் கிரகம் ஒரு முடிவு எடுக்கும் என்ற நண்டுத் தலைவன் தொடர்ந்து, எனது உடலிலிருந்து நூறு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு கசிவு ஏற்படும். அப்பொழுது நான் தவத்திலிருப்பேன். சிறு சிறு துளிகளாக வெளிப்படும் கசிவுத் துளிகள் பெரிய இலைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

அவை முப்பது நாட்களின் பின் நண்டு மனிதர்களாக உருவாவார்கள். அதற்கு முன் நான் இங்குள்ள ஒரு மரத்தின் வித்துக்களை தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிடுவேன்.அதன்பிறகே என்னுடலில் இக்கசிவு ஏற்படும். எனக்கு மட்டுமே இத்தகுதியை மாங்கதிர் கிரக விஞ்ஞானிகள் தந்திருக்கிறார்கள்.

15,000 கிரகத்திற்கு தலைமைக் கிரகமாக இருக்கும் மாங்கதிர் கிரகத்தில் உள்ள விஞ்ஞானிகளும், அங்கினங்கா யானைமுக மனிதர்களின் விஞ்ஞானிகளும் நானும் நீங்களும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.நான் இங்குள்ள ஒரு சக்திமிக்க பழங்களினால்தான் அந்தக் கசிவு ஏற்படும். நான் உண்ட அந்தப் பழங்கள் மாங்கதிர் கிரகத்திலும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்களும் அதை உண்பீர்கள். மிகுதியை மாங்கதிர் கிரக விஞ்ஞானிகள் விளக்குவார்கள் சென்று வாருங்கள் என்று சொன்ன நண்டுக்கிரகத் தலைவன் அவர்களிருவருக்கும் குடிப்பதற்கு தண்ணீர் போன்ற ஒன்றைக் கொடுத்துவிட்டு விடைபெறுகிறான். அதைக் குடித்ததும் சாமிக்கும் சுந்தரிக்கும் புளகாங்கிதம் ஏற்படுகின்றது.

கூடாரத்திற்கு வெளியே வந்தே சாமியையும் சுந்தரியையும் நண்டு மனிதர்களிருவரும் வட்டவடிவமான வாகனத்தில் ஏற்றுகிறார்கள். அந்த வாகனம் மாங்கதிர் கிரகத்தை நோக்கி மிதந்து செல்வது போல செல்கிறது.அது வேகமாகவே செல்கிறது.ஆனால் உள்ளேயிருக்கும் போது வேகத்தை கணக்கிட முடியாது.

சென்று கொண்டிருக்கும் போது, மாங்கதிர் கிரகத்திலிருந்து ஒரு தகவல் வருகின்றது. உங்களிருவரையும் நீங்கள் இருவரும் வாழ்ந்த பூமிக்கு மேலாக அங்குள்ள மனிதர்களின் கண்கள் பார்க்கும் உயரத்தில பறக்குமாறு சொல்லியிருக்கிறார்கள் நாங்கள் பூமியின் மேலால் பறக்கும் போது இந்தக் கருவியூடாகப் பார்க்குமாறு நாங்கள் சொல்வோம் நீங்கள் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.

சில பொழுதுகள் செல்ல இப்பொழுது பாருங்கள் என அவர்கள் சொன்னார்கள். சாமியும் சுந்தரியும் பார்த்தார்கள் அவர்களுக்க வியப்பு ஏற்பட்டது. வியப்பு உணர்வு ஏற்பட்டதற்கு காரணமே நண்டுத் தலைவன் கொடுத்த அந்தத் தண்ணீர் போன்ற திரவத்தின் செயல்பாடுதான்.

(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *