Thursday, January 18, 2018

.
Breaking News

நடிகர் தனுசுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை!

நடிகர் தனுசுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை!

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிகரட் புகைக்கும் காட்சிகளில் நடித்தமையால், நடிகர் தனுசுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது.

மாரி திரைப்படத்தில் புகைத்தல் காட்சிகளில் நடித்திருந்த நடிகர் தனுஷிற்கு எதிராக உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்புகள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து, தனுஷ் தனது திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அன்புமணி ராம்தாஸ்க்கு கடிதம் மூலம் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், நல்லூர் ஆலய திருவிழா காலத்தின் போது இளைஞர்கள் தனுஷின் இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிராக கையெழுத்திட்டு எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இளைஞர் குழு ஒன்றே இந்த செயற்பாட்டை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *