Thursday, January 18, 2018

.
Breaking News

மலரும் முகம்பார்க்கும் காலம்-கவி-14

மலரும் முகம்பார்க்கும் காலம்-கவி-14

மலரும் முகம் பார்க்கும் காலம்
மண்ணில் நம்வாழ்க்கை கோலம்
ஒளியை காணும் போதெல்லாம்
உள்ளம் தானே மலர்வாகும்
கருவைகொண்டு உலகைக்கண்டு
உறவைக்கண்ட வாழ்கை
உயிரைத்தந்து உலவவைத்து
மகிழ்வைக்கண்ட அன்னை-எம்
உயர்வைக்கண்டு மலரும் அவள் முகம்தானே
விழிகள் அழகைக்கானும்போது-புது
விந்தையாய் மனம் அலைமோதும்
விந்தையின்படைப்பாய் இறைவன் எமது
சிந்தையின் பதிவைவைத்தான் பாரும்
அலையை கரையில் அலைய வைத்து
கரையும் காதல் கொள்ள-மனிதன்
மொழியின் உரையினில் அர்த்தம் தவித்து
காதல் மொழியே கண்கள் பேச
கடவுள் தந்த விசித்திரமே
காதலர் கனவுகள் நனவுகள் ஆகும்போது – அவர்கள்
மலரும் முகம் பார்க்கும் காலம் மனம் மலரும்

12004714_1611524615778508_3422178851695912294_n (1)

About The Author

Related posts