Saturday, February 24, 2018

.
Breaking News

கழிவு நீர் குழிக்குள் இறங்கிய 4 பேர் பலி

கழிவு நீர் குழிக்குள் இறங்கிய 4 பேர் பலி

சத்திஸ்கர் மாநிலத்தில் வீட்டின் கழிவு நீர் குழிக்குள் இறங்கிய 4 பேர் விஷவாயு தாக்கி பலியாகினர்.

சுராஜ்புர் மாவட்டத்தை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். வீட்டிற்கு அருகே அமைந்துள்ள கழிவு நீர் குழிக்குள் விழுந்த மரக்கட்டைகளை அகற்றுவதற்காக  அவரது மகன் மற்றும் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவரும் குழிக்குள் இறங்கி உள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் இவர்கள் வெளியில் வரவில்லை.

இதையடுத்து சத்தியநாராயணா மற்றும் இன்னொரு பணியாளரும் குழிக்குள் இறங்கி உள்ளனர். அவர்களும் வெளியில் வராததால், சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் குழிக்குள் மயக்கமடைந்து கிடந்த 4 பேரையும் வெளியில் எடுத்துள்ளனர்.

வெளியில் எடுத்த பின்னரே 4 பேரும் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. கழிவு நீர் குழிக்குள் இருந்த விஷவாயு தாக்கி 4 பேரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அவர்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் குறித்து உறுதியாக கூற முடியும் என தெரிவித்துள்ளனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *