Thursday, December 14, 2017

.
Breaking News

ஐ.எஸ் பிடியில் இருந்த ஈராக்கின் கடைசி நகரமும் மீட்பு

ஐ.எஸ் பிடியில் இருந்த ஈராக்கின் கடைசி நகரமும் மீட்பு

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த ஈராக்கின் தல் அபர் என்ற கடைசி நகரமும் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் கைப்பற்றப்பட்டு அதைத் தமது நாடு என அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர். இந்நிலையில், ஈராக் ராணுவம், அமெரிக்கா உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரை சமீபத்தில் மீட்டது.

அதை தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் இருந்த நகரங்கள் படிப்படியாக மீட்கப்பட்டன. இந்த நிலையில் அவர்கள் வசம் இருந்த தல் அபர் என்ற கடைசி நகரமும் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல்- அபாடி டிவியில் அறிவித்துள்ளார். அதன் போது ஐ.எஸ்.தீவிரவாதிகள் சரணடைய வேண்டும். அல்லது மடிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமான தல் அபார், ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *