Monday, October 23, 2017

.
Breaking News

வட கொரியாவுடனான உறவை துண்டியுங்கள் – அமெரிக்கா

வட கொரியாவுடனான உறவை துண்டியுங்கள் – அமெரிக்கா

அமெரிக்கா – வட கொரியா இடையிலான பிரச்சனை தொடர் இழுபறியான நிலையில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அரசு தரப்பு, லத்தீன் அமெரிக்க நாடுகள், வட கொரியாவுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவிக்கையில்

கிம் ஜோங் உன் தலைமையின் கீழ் இயங்கும் வட கொரியாவுடனான பிரச்னையில், அந்நாட்டை தனிமைப்படுத்துவதில் அமெரிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது.

எனவே சிலி, பிரேசில், மெக்சிக்கோ, பெரு ஆகிய நாடுகளிடம் வட கொரியாவுடன் அவர்கள் வைத்துள்ள தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கோள்கிறேன் என பல லத்தீன் நாடுகளுக்கு நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து மைக் பென்ஸ், அமெரிக்கா அதன் முழு சக்தியையும் பயன்படுத்தி, வட கொரியாவை பணிய வைக்கும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா – வட கொரியா இடையிலான பிரச்னை ஆரம்பித்த போது, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வரும் சூழல் இருந்தது.

ஆனால், வட கொரியாவின் மோதல் போக்கினால், அமெரிக்கா பொறுமை இழந்து, வட கொரியாவுடன் போருக்கும் தயார் என்று சொல்லும் நிலைக்கு வந்தது.

உலக நாடுகள் பலவும் தொடர் முயற்சி எடுத்து வருகிற போதும் இரு நாட்டுப் பிரச்னை இன்னும் தீராத நிலையில் உள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *