Saturday, February 24, 2018

.
Breaking News

காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன படைகள் ஊடுருவும் முயற்சி முறியடிப்பு

காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன படைகள் ஊடுருவும் முயற்சி முறியடிப்பு

காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள பான்காங் ஏரிக்கரையையொட்டி சீன படைகள் ஊடுருவும் முயற்சி முறியடிப்பு.

காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள பான்காங் ஏரிக்கரையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சீன படைகள் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டன. உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் காலை 9 மணிக்கு மற்றொரு பகுதியில் மீண்டும் சீன படைகள் ஊடுருவ முயன்றன. இதனால் இந்திய வீரர்கள் மனித சங்கிலி போல அணிவகுத்து அரணாக நின்று அவர்களின் முயற்சியை முறியடித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். உடனே இந்திய வீரர்களும் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் சீன படையினர் பின்வாங்கி தங்கள் பகுதிக்கு சென்றனர். ஏற்கனவே சிக்கிம் எல்லை பகுதியில் சீன படைகள் அத்துமீறல் நடத்தி வரும் நிலையில் இந்திய சுதந்திர தினமான நேற்று காஷ்மீரில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *