Thursday, December 14, 2017

.
Breaking News

இந்திய சுதந்திர தினம் இன்று

இந்திய சுதந்திர தினம் இன்று

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. இந்நாளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் ஜனவரி 26.

இந்நிலையில் 1947 பிப்., 10ல் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். உடனடியாக இவர் நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சுகள் நடத்தினார். இது சுமூகமாக முடியவில்லை. இது தொடர்பாக 1947 ஜூன் 3ல் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் மற்றும் நாட்டைப் பிரிப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவுக்கு ஆக., 15ல் சுதந்திரம் என அறிவிக்கப்பட்டவுடன் ஜோதிடர்கள் அன்றைய நாள் சரியில்லை, இரண்டு நாட்கள் கழித்து கொடுக்கலாம் என இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். மவுண்ட்பேட்டனுக்கு, ஆகஸ்ட் 15 தனிப்பட்ட முறையில் விருப்பமான தேதி அதனால் இந்த தேதியில் அவர் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். (இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள்). இதனால் ஆகஸ்ட் 15 நள்ளிரவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. மேலும், இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் ஆகஸ்ட் 15 அன்று தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன என்பது  தகவல்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *