Wednesday, November 22, 2017

.
Breaking News

அச்சத்தில் நடுங்கிப்போய்விட்டோம்!

அச்சத்தில் நடுங்கிப்போய்விட்டோம்!

இங்­கி­லாந்து – அவுஸ்­தி­ரே­லியா அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5-ஆவது ஒருநாள் போட்­டி­யின்­போது, அவுஸ்தி­ரே­லி­யாவின் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய அதி­வேக பௌன்ஸர் இங்­கி­லாந்து அணித் தலைவர் இயான் மோர்­கனின் தலையில் தாக்­கி­யது. உட­ன­டி­யாக அவர் ரிட்­டையர்ட் ஹர்ட் முறையில் போட்­டி­யி­லி­ருந்து வெளி­யே­றினார்.

மோர்­கனை பௌன்ஸர் தாக்­கி­யதும் ஸ்டார்க் உட்­பட சில ஆஸி. வீரர்கள் அச்­சத்தால் நடுங்கிப் போய்விட்­டனர் என அவுஸ்­தி­ரே­லிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறி­யுள்ளார்.

இந்­தப்­போட்­டியில் ஸ்டார்க் வீசிய 7ஆ-வது ஓவரை எதிர்­கொண்டார் மோர்கன். அந்த ஓவரின் 5-ஆவது பந்தை 144.8 கி.மீ வேகத்தில் பௌன்­ஸ­ராக வீசினார் ஸ்டார்க். அந்த பந்து மோர்­கனின் ஹெல்­மெட்டைத் தாக்­கி­யது. இதில் நிலை­கு­லைந்த அவர், தடு­மா­றினார். பின்னர் கீழே அமர்ந்து விட்டார்.

உட­ன­டி­யாக மருத்­து­வர்கள் மோர்­கனைப் பரி­சோ­தித்து முத­லு­தவி அளித்­தனர். மோர்­கனால் ஆட்­டத்தைத் தொடர முடி­ய­வில்லை. அவரின் தலையில் உள்­காயம் ஏற்­பட்­டுள்­ளது.

இதே­போன்ற சம்­ப­வத்தால் ஏற்பட்ட அவுஸ்­தி­ரே­லிய வீரர் பிலிப் ஹியூக்ஸின் மரணம் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், மோர்­கனை பந்து தாக்­கி­யதால் தாங்கள் நடுங்கிப் போன­தாக அவுஸ்­தி­ரே­லிய தலைவர் ஸ்மித் தெரி­வித்­துள்ளார்.

இது­தொ­டர்­பாக ஸ்மித் கூறி­ய­தா­வது:

அண்­மை­யில்தான் பிலிப் ஹியூக்ஸை இழந்­துள்ளோம். எனவே, மோர்­கனை பந்து தாக்கியதும் சில வீரர்கள் நடுங்கி விட்டோம். நல்லவேளையாக அவர் நலமாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About The Author

Related posts