Wednesday, November 22, 2017

.
Breaking News

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களால், இந்திய மக்களின் உரிமைகள் மீதும், பாதுகாப்பின் மீதும் பிரச்சினைகள் ஏற்படுவதாககூறி மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

இதன் காரணமாக விசா இல்லாத இலங்கைத் தமிழர்களும் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தீவிரவாத அமைப்புகள் தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டு, அவர்களை நாடு கடத்துவதற்கு ஏதுவாக, மாவட்ட அளவில் ஒரு குழுவை அமைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியான்மாரைச்சேர்ந்த ரோஹிங்கியாஸ் முஸ்லீம் இனத்தவர்கள் இந்தியாவில் தங்கி இருப்பதாகவும் சுமார் 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றது.

இதேபோல வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருப்பதாக, 2016-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்ததாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்படுகிறது. இந்த தகவலில் இலங்கைத் தமிழர்கள் பற்றி குறிப்பிடப்படாவிடினும், சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை நாடுகடத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்தியரசு உத்தரவிட்டுள்ளது விசா இன்றி தங்கியிருக்கும் அனைவருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் இலங்கைத்தமிழர்கள் நாடுகடத்தப்படுவார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *