Monday, December 11, 2017

.
Breaking News

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ்: செப்டம்பரில் வெளியாகிறது ‘செம’

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ்: செப்டம்பரில் வெளியாகிறது ‘செம’

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘செம’ படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. செப்டம்பரில் வெளியாகவுள்ளது.

‘நாச்சியார்’ படத்தைத் தொடர்ந்து ‘ஐங்கரன்’ மற்றும் ‘குப்பத்து ராஜா’ படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அதனைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த ‘செம’, ‘4ஜி’ மற்றும் ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இவற்றில் ‘செம’ படத்தின் பணிகளை முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளிக்கவே, செப்டம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து விரைவில் வெளியீட்டு தேதியை இறுதி செய்யவுள்ளனர்.

இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செம’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி படத்துக்கு இசையும் அமைத்துள்ளார். அர்த்தனா, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *