Thursday, December 14, 2017

.
Breaking News

உற்றார் – பத்துவரிக் கவிதை – 5:

உற்றார் – பத்துவரிக் கவிதை – 5:

பெற்றோர் உடன்பிறந்தோர் என அதையும் தாண்டிவரும்
உற்றார் எனும் பந்தம் உறவாகி நம்முடன் சேர்ந்து வரும்

வாழ்வில் ஏற்றம் காணும்போது இடைவெளி வந்திடாது
வாழ்வோ இறக்கம் கண்டாலது இருக்குமிடம் தெரியாது

புகழோடு நாமிருந்தால் தூரத்து உறவும் அருகில் வரும்
புகழை நாமிழந்தால் நெருங்கிய உறவுமே விலகிவிடும்

மற்றோர் உதவ வந்தால் முட்டுக்கட்டை போட்டு நிற்கும்
உற்றார் யாமிருக்க உதவ நீயாரெனத் தடையாயும் நிற்கும்

உற்றாரிலே அத்தி பூத்தாற்போல் நல்லவர் சிலரும் உண்டு
ஏற்று வாழாவிடின் அனாதையெனும் பெயர் நமக்குமுண்டு

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts