Tuesday, October 24, 2017

.
Breaking News

பிலிப்பைன்ஸில் பறவைக் காய்ச்சல்!

பிலிப்பைன்ஸில் பறவைக் காய்ச்சல்!

பிலிப்பைன்ஸில் இரண்டு இலட்சம் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அப்பறவைகளை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவைகளுக்கே இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக விவசாயப் பிரிவுக்கான செயலாளர் இமானுவேல் பைனோல் தெரிவித்துள்ளார்.

பாம்பங்கா மாகாணத்தில் சான் லூயிஸ் பகுதியிலுள்ள பண்ணையொன்றில் காணப்பட்ட பறவைகளுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளமை முதன்முதலில் கண்டறியப்பட்டது.

இதன் பின்னர், ஏனைய ஐந்து பண்ணைகளிலுள்ள பறவைகளுக்கும் இந்த நோய் பரவியுள்ளது.

இந்நிலையில், இந்த நோய் மனிதர்களுக்குப் பரவியுள்ளமை தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இருந்தபோதிலும், பண்ணையில் பணி புரிந்துவந்த ஊழியர்களுக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நோய்த் தொற்றானது, சீனாவிலிருந்தோ அல்லது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட பறவைகள் மூலமாகப் பரவியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *