Saturday, August 19, 2017

.
Breaking News

நவாஸ் ஷரீப்பின் இடத்தில் அவரது மனைவி!

நவாஸ் ஷரீப்பின் இடத்தில் அவரது மனைவி!

பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தால், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கடந்த மாத இறுதியில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, ஷரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷரீப்பை அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்க அவரது முஸ்லீம் லீக் கட்சி தீவரமாக பணியாற்றி வருகிறது. தற்போது இடைக்கால பிரதமராக அப்பாஸி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நவாஸ் ஷரீப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இடத்திற்காக அவரது மனைவி கல்ஸூம் ஷரீப் போட்டியிடவுள்ளார். இதற்காக அவர் ஒப்புக்கொண்டதாகவும், வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கல்ஸூமுக்கு அரசியல் புதிதல்ல. 1999ம் ஆண்டு, ஷரீப்பை முன்னாள் அதிபர் முஷாரப் சிறையில் அடைத்த பிறகு, முஸ்லீம் லீக் கட்சியை கல்ஸூம் வழிநடத்தினார். பின்னணியில் கட்சிப் பணிகளை நிர்வகித்த அவர், தேர்தலில் நிற்பது இதுவே முதல்முறையாகும்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *