Saturday, August 19, 2017

.
Breaking News

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த சிறப்புக் கொமாண்டோக்கள் களத்தில்!

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த சிறப்புக் கொமாண்டோக்கள் களத்தில்!

யாழ்.குடாநாட்டின் கடலோரப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு நிறுவப்பட்ட கடலோரக் காவற்படையினருக்கு உதவியாக சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த 7ஆம் நாள் பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர், கடற்படை கொமாண்டோக்களின் உதவியுடன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 21ஆம் நாள் மணற்காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்களை தடுக்க முற்பட்ட கடலோரக் காவற்படையினரை மணல் கடத்தியவர்கள் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.

இதனையடுத்து, குறித்த பிரதேசத்திற்குச் சென்று ஆய்வுசெய்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன கடலோரக் காவற்படையினருக்கு உதவியாக சிறப்புக் கொமாண்டோக்களை களத்திலிறக்க உத்தவிட்டுள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *