Monday, December 11, 2017

.
Breaking News

குவாம் தீவை வட கொரியா தாக்குமா? ‘அழித்துவிடுவேன்’! –டிரம்ப்.

குவாம் தீவை வட கொரியா தாக்குமா? ‘அழித்துவிடுவேன்’! –டிரம்ப்.

அமெரிக்காவின் பசிபிக் தீவான குவாம் மீது இம்மாத மத்தியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்குத் தாங்கள் தயராகி வருவதாக வடகொரியா அதிர்ச்சி தரும் வகையில் மிரட்டல் விடுத்திருக்கிறது.

தங்களின் ஏவுகணைகள் குவாம் தீவிலிருந்து 30 மீட்டர் தொலைவிலுள்ள இலக்கைத் தாக்குவதற்கான பரிட்சார்ந்த சோதனைகளை நடத்தப் போவதாகவும், தங்களின் தலைவர் கிம் ஜோங் யுனின் அனுமதி எந்த நேரத்திலும் கிடைத்துவிடும் என்றும் வட கொரியா அதிகாரிகள் கூறினர்.

இந்த குவாம் தீவில் அமெரிக்க இராணுவ முகாம் அமைந்துள்ளது. இங்கு 7 லட்சத்து 63 பேர் வாழ்கின்றனர். அமெரிக்காவின் போர் விமானங்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

‘ஹூவாசோங்.12’ என்ற சக்திவாய்ந்த ஏவுகணைகளைக் குவாம் தீவை நோக்கி ஆகஸ்டு மாத மத்தியில் பாய்ச்சப் போவதாக வட அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே வடகொரியா அப்படிப்பட்ட தாக்குதல் ஒன்றை நடத்தினால், அதுதான் அந்த நாட்டின் கிம் ஜோங் யுன் ஆட்சிக்கு அடிக்கப்பட்ட கடைசி சாவிமணியாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் போர் ஆற்றலுக்கு எந்த வகையிலும் வட கொரியா ஈடாகாது. எங்களின் உக்கிரத் தீயில் அது அழிய நேரும் என்று டிரம்ப்    எச்சரித்திருந்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *