Tuesday, November 21, 2017

.
Breaking News

“ஒற்றுமையுடன் இருங்கள்” – தமிழரசுக் கட்சியினருக்கு சம்பந்தன் அறிவுரை.

“ஒற்றுமையுடன் இருங்கள்” – தமிழரசுக் கட்சியினருக்கு சம்பந்தன் அறிவுரை.
நாட்டின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அது தொடர்பான தீர்வுத்திட்ட முன் வரைபு வெளியாகுவதில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை தொடர்பாக தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறிய த.தே.கூட்டமைப்பின் தலை வரும், எதிர்க்கட்சித் தலைவரு மான இரா.சம்பந்தன், தீர்வுத் திட் டம் வெளிவரும் வரையில் கட்சி உறுப்பினர்களால் கட்சிக்குள் குழ ப்பம் ஏற்படுவது பாதிப்புக்களை ஏற் படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்
இரா.சம்பந்தருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை 5.15 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை கொழும்பில் உள்ள எதிர்க்கட் சித் தலைவரது அலுவலகத்தில் நடை பெற்றது.
இதன்போது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசிய இரா.சம்பந்தர், தற்போதுள்ள அர சியல் சூழ்நிலையில் புதிய அரசியலமைப் பின் முக்கியத்துவத்தை கட்சியின் உறுப்பின ர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும், கட்சி க்குள் பிளவுகள் ஏற்படுவது தீர்வுத்திட்டத்தையும் பாதிப்படையச் செய்யும் ஆகவே கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையு டன் செயற்பட வேண்டும்.
வடக்கு மாகாண சபையில் அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ ரசுக் கட்சி ஏற்பது இல்லை என்ற முடிவு மற் றும் அது தொடர்பான குழப்பங்கள் தொடர் பில் மத்திய செயற்குழுவைக் கூட்டி விரைவில் முடிவெடுப்போம், அதிகாரமிக்க அர்த்த முள்ள அரசியல் தீர்வை அதிகாரப்பகிர்வின் ஊடாக நாம் பெற ஒற்றுமையுடன் முயற்சிக்க வேண் டும்.
ஆகவே கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையு டன் செயற்பட வேண்டும். வடக்கு மாகாண சபையில் அமைச்சுப் பொறுப்புக்களை தமிழரசுக் கட்சி ஏற்பது இல்லை என்ற முடிவு மற் றும் அது தொடர்பான குழப்பங்கள் தொடர்பில் மத்திய செயற்குழுவைக் கூட்டி விரைவில் முடிவெடுப்போம், அதிகாரமிக்க அர்த்த முள்ள அரசியல் தீர்வை அதிகாரப்பகிர்வின் ஊடாக நாம் பெற ஒற்றுமையுடன் முயற்சிக்க வேண்டும்.
அரசியல் ரீதியான வேறுபாடுகளைக் களைந்து மக்களுக்காக செயற்பட அனை வரும் ஒன்றிணைந்து இருப்போம் என்ற விடயங்களை வலியுறுத்தி உறுப்பினர்கள் மத்தியில் இரா.சம்பந்தர் உரையாற்றியிருந் தார்.
மேற்படி சந்திப்பில் நாடாளுமன்ற உறுப் பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சும ந்திரன், திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா, சிறி நேசன், சிறீதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் சார்பில் தர்மலிங்கம், கம லேஸ்வரன், அஸ்மின், சத்தியமூர்த்தி, ஆர்னோல்ட், சயந்தன் ஆகியோர் கலந்து கொண் டிருந்தனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *