Tuesday, October 24, 2017

.
Breaking News

எழுத்தில் எதைச் சாதித்தோம்!

எழுத்தில் எதைச் சாதித்தோம்!

எழுத்தில் எதைச் சாதித்தோம் என்கிற நினைப்பு வரும் போதெல்லாம் கூனிக்குறுகிப்போகிறோம்.சாதித்தவர்களை நினைத்துப்பார்க்க ஆச்சரியமாகவும்.பிரமிப்பாகவும் இருக்கும்.
ஆனால்,
நமது மூத்த எழுத்தாளர்களை ஆகர்சிக்கவும்,சாதித்தவர்களை கொண்டாடவும் தவறி விடுகிறோமோ என்கிற அச்சமும் இல்லாமல் இல்லை.
மேலாக,
தன்னையே அல்லது தன்னை மட்டுமே கொண்டாடவேண்டும் என்கிற மனப்பாங்கு மேலோங்கி வருவதையே முகநூல் அல்லது இணையங்களில் எழுதும் எழுத்தாளர்களைக் கவனிக்கையில் நினைக்கத் தோன்றுகிறது.
பட்டங்களை முன் போடவேண்டும்,பேராசிரியர் என்றெல்லாம் போடவேண்டும் என்கிற கோரிக்கைகளும் இல்லாமல் இல்லை.
எழுத்தில் சாதிக்கவேண்டும் என்கிற முனைப்பு உள்ளவர்கள் மௌனித்தும் போகிறார்கள். நுணுக்கம் தெரிந்தவர்களை வியாபாரிகளாகவோ,பிரபலங்களாகவோ தோன்றுகிறார்கள்.
ஊடகங்களும் அவர்களுக்கே துணைபோவதாகவே உணர்கிறோம்.

முல்லை அமுதன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *