Thursday, January 18, 2018

.
Breaking News

பாதுகாப்பு கட்டமைப்பில் ஆசியான் முக்கிய பங்கை வகிக்கின்றது: விஜய் குமார் சிங்

பாதுகாப்பு கட்டமைப்பில் ஆசியான் முக்கிய பங்கை வகிக்கின்றது: விஜய் குமார் சிங்

ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பில், தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) முக்கிய பங்கை வகிக்கின்றதென அமைச்சர் விஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டிற்கு மேலதிகமாக, ஆசியான் தலைவர்களுடன்நடைபெற்ற சந்திப்பின்போதே விஜய் குமார் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 27 நாடுகளின் பங்கேற்புடன் நாளை ஆரம்பமாகவுளள ஆசியான் மாநாட்டில், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. குறிப்பாக, வடகொரியாவால் அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஆசியான் தலைவர்கள் ஏற்கனவே விடுத்துள்ள கூட்டு அறிக்கையொன்றில், கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த உதவுமாறு வட கொரியாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *