Tuesday, November 21, 2017

.
Breaking News

அமரர் யோசப் பிறேராஜா!

அமரர் யோசப் பிறேராஜா!

நாடக நடிகர் பிறேராஜா
1986 முதல் 2017 வரை
டென்மார்க்கில் பாறும் நகரில்
தமிழர் வாழ்வில் ஓர் விம்பம் !

எப்படி தொடங்குவது என்று புரியவில்லை
முடிவும் தொடக்கமும் ஒன்றாகினால்
முற்றுப்புள்ளி கிடையாது.

ஜனனமும் மரணமும் நியதியென்றானபின்
வாழ்கையே ஓர் தத்துவமாகிறது

எல்லோரிடத்திலும்
அன்பை தெளித்து
பண்பில் பாத்தி கட்டி
வம்பில்லா நட்பில் …
உழுது பாசத்தை விதைத்தவனே !
இதுகும் வேசமென இருக்க கூடாதா ?

வகை வகையாய்
நாடகங்கள்
நடிப்புகள் …லென – நாம்
ஒன்றாய் ஆடிய மேடைகள் எத்தினை ?

சேயாலாண்ட்
மேடைகள் எங்கும்
நடிப்பினை தெளித்து
விழிப்பினை உண்டு பண்ணிய நடிகன் !

வாழ்க்கையும் ஓர் நாடகம் தானென
வாழ்ந்து காட்டினாய்
நோயின் வலியை மனதுக்குள் புதைத்து
புன்னகைத்து காட்டினாய்.

தமிழ் தாய் நாடக மன்றத்திலும்
பல வேடம் போட்டாடினாய்
பாதியிலே ஏன் இந்த வேடம் போட்டு
எம்மை ஏமாற்றினாய் ?

பாறும் நட்புறவு சங்கத்தின்
முன்னை நாள் தலைவன்
புதிய தலை முறைக்கு வழிவிட்டு
அமைதி வழியில் வாழ
பயிற்சி எடுக்க சென்றாயோ !

அகத்தின் அழகினை
முகத்தில் தெளித்து …
கோபமே கண்டறியேன்
உன்னிடத்திலே

புன்னகை சொரியும் பண்பினை
இவ்வுலகிற்கு கற்பித்து சென்றவனே !

விண்ணப்பமிட்டு
வண்ணப் பரப்பில் காத்திருக்கும்
எண்ண விழையாட்டல – இறைவன்
எண்ணிய விழையாட்டில் அவன்
கை காட்டும் இடம் மட்டும்
கை கோர்த்து அன்பில்
வாழ்ந்து விட்டு போவது தான் வாழ்கை

அந்த வாழ்வினில்
வாழ்வாங்கு வாழ்ந்து நீ
வென்று விட்டாய் நண்பா !

உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்தித்து கொள்கிறேன்.

நண்பன் இணுவையூர் சக்திதாசன்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *