Wednesday, November 22, 2017

.
Breaking News

அமரர் திரு.தியாகராஜா ஞானப்பிரகாசம்!

அமரர் திரு.தியாகராஜா ஞானப்பிரகாசம்!

மலர்வு:- 02.01.1952 உதிர்வு:- 31.07.2017

இலங்கை, யாழ்ப்பாணம், இணுவில் தெற்கினைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேணை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.தியாகராஜா ஞானப்பிரகாசம் அவர்கள் கடந்த 31.07.2017 திங்கட்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி. தியாகராஜா பூமணி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி.சின்னத்துரை அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மருமகனும், பத்மாதேவியின் அன்புக் கணவரும், கஜாழினி, கஜானன், கஜநிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ரஞ்சித் குமார், அகலிகை ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜதுசன், யோஜனா, கிஷோன், கவிசா ஆகியோரின் அன்புப் பேரனும், பரமலிங்கம், அருள்பிரகாசம், ஆகியோரின் பாசமிகு சகோதரனும், மீனலோசனி,

தனலட்சுமி, காலம் சென்ற சோமாஸ்காந்தன், கண்ணன் சண்முகசுந்தரம், குருமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார் .

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 06.08.2017 காலை பத்து மணிக்கு அன்னாரின் பூதவுடல் Joyce Chapel Fawkner இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இந்துமத இறுதிக் கிரியைகள் யாவும் நடைபெற்று, Fawkner cemetery,1187 Sydney Road Fawkner இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தயவு செய்து இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

தகவல்

மகள் கஜாழினி + 61 412 722 121

மைத்துனர் கண்ணன் சண்முகசுந்தரம் – + 61 433 438 790

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *