Sunday, January 21, 2018

.
Breaking News

கவிதாயினி உமா மகேஸ்வரியின் அகால மறைவு!

கவிதாயினி உமா மகேஸ்வரியின் அகால மறைவு!

வணிகவியல் ஆசிரியை, சிறந்த படைப்பாளி, மற்றும் நிலாமுற்றத்தின் பொறுப்பாளருமான கவிதாயினி உமா மகேஸ்வரியின் அகால மறைவு தமிழ் கவியுலகத்தில் ஒரு சிறந்த கவிதைச் சகோதரியை இழந்தது. அவருக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சென்ற ஞாயிறு அன்றுதான் சென்னை பூந்தமல்லியில் அவரது “ சிப்பிக்குள் முத்து “ கவிதை நூலினை கவிஞர் வயலை பாரதிவாசன் அவர்களின் திருக்குறள் மையத்தில் திறனாய்வு செய்தேன். அன்று உமா மகேஸ்வரி அவர்கள் எனது திறனாய்வில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். அன்றே ஒரு கவியரங்க நிகழ்வுக்கும் தலைமை வகித்து சிறப்புற நடத்தினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்புச் சகோதரர் ஜாகிர் அவர்கள் செய்தார்கள்.

திறன்மிக்க அன்புச் சகோதரி குறைந்த இரத்த அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று பள்ளியில் மாரடைப்பால் மறைந்தார் என்ற செய்தி கவலைக்குள் ஆழ்த்தியது. அவரது ஆன்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறேன்.

“ விதியை வெல்வோம்
வெளியே வா பெண்ணே
மதிகெட்ட மாந்தரின்
மடமையைக் கொளுத்துவோம் “
என எழுதியவரை
இன்று விதி சதிசெய்து
அந்தக் கவிதை நிலவை
சிப்பிக்குள் அடைத்துவிட்டதே !

“ வாழ்க்கையின் அதிசயம்
வற்றாத வார்த்தைகள்
வாழ்ந்திட நினைக்குமே
வாழ்வதும் இனிக்குமே “
என வாழ்க்கையின்
இனிய வாழ்தலை
மற்றவருக்குச் சொல்லி
விரைவிலே தனது வாழ்வை
ஒரு பூஜ்ஜியத்துக்குள்
முடித்துக்கொண்டாயே…
கவிதாயினி….
இனி எப்போதும்
உனது கவிதைகள்
ராஜ்ஜியம் ஆளும்
என்பது உண்மை !
உனக்கு எனது ஆழ்ந்த
கண்ணீர் அஞ்சலி !

……..கா.ந.கல்யாணசுந்தரம்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *