Thursday, December 14, 2017

.
Breaking News

இன-மத வேறுபாடின்றி அபிவிருத்திகள் முன்னெடுப்பு- கிழக்கு முதல்வர்

இன-மத வேறுபாடின்றி அபிவிருத்திகள் முன்னெடுப்பு- கிழக்கு முதல்வர்

இன, மத, பேதமற்ற ஆக்கபூர்வமான அபிவிருத்திகளையே தாம் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து     உ​ரையாற்றுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அபிவிருத்திப் பணிகளில் எனக்கு கலந்து கொள்ளகிடைப்பதால் குறித்த பகுதிகளுக்கு மாத்திரமே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாக ஒரு தவறான தோற்றப்பாட்டை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றார்கள்.

ஆனால் நாம் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும்,எல்லா ஊர்களிலும் எல்லா கிராமங்களிலும் சமமான அபிவிருத்திகளையே முன்னெடுக்கின்றோம்.

நாம் ஒரு பகுதிக்கு மாத்திரம் தான் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம் என்று நிரூபிக்க கூடிய உரிய ஆவணங்களோ,புள்ளிவிபரங்களோ இன்றியே எம்மீது குற்றம்சுமத்துகின்றனர்.

ஆகவே நாம் இன, மத, மொழி பிரதேசவேறுபாடுகளின்றி சகல பகுதிகளுக்குமான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எவர் தடைகளை ஏற்படுத்தினாலும் இறைவன் துணையுடன் மக்களுக்கான அபிவிருத்திகளை நாம் அவர்களுக்கு கொண்டு சேர்ப்போம் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

ஆகவே சிலர் தமது சுயலாப அரசியலுக்கு இவ்வறான கருத்துக்களை பரப்ப முற்பட்டாலும் மக்கள் மிக தௌிவாக இருக்கின்றார்கள் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *