Friday, February 23, 2018

.
Breaking News

வீணென எண்ணிடுவோம்!… … } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..

வீணென எண்ணிடுவோம்!… … } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..

ஆத்தாடி மாரியம்மா இங்கே வந்து

கூத்தாடும் மக்களை பாருமம்மா
சாத்திரங்கள் பல சொல்பவர்கள்
ஆத்திரத்தில் ஏதோ சொல்கிறாரே
வேப்பிலைக்காரியே வாருமம்மா
கூப்பாடு போடும் மனிதரெலாம்
காப்போம் மக்களை என கூறாது
சாப்பாட்டுராமனாய் இருப்பதேனம்மா
ஆயிரங்கண் உடையவளே அம்மா
பாயிரங்கள் மட்டும் படித்து விட்டு
வாயிலே வித்தைகள் காட்டுவோரை
தாயினும் சாலப்பரிவதும் ஏனம்மா
நீலியே சூலியே ஓங்காரியம்மா
வாழ்யவில் பற்றியே பேசவந்தால்
வேலி பயிரை மேய்வதுபோல் சிலர்
ஆலையிலா ஊரில் அப்பூ ஆகலாமா
குங்குமக்காரிக்கு கூழ் மிகவும் பிடிக்கும்
சங்கத்தமிழும் கூழ்பற்றியும் கூறிநிற்கும்
இங்கு சிலர் கூழெனில் முகம் சுளிப்பர்
அங்கு பக்தியில் எவரும் ஈடுண்டோ என்பார்
மாரியாய் வந்து மண்ணில் பொழிபவளே
காரியங்கள் ஆற்ற இங்கு பலவிருக்க
வீரியமாய் வெட்டிக்கதை பேசித்திரியும்
கோரிக்கையற்றோர் குரலை வீணென்போம்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *