Monday, October 23, 2017

.
Breaking News

இலங்கை குறித்த தீர்மானத்தில் மக்கள் நலன் உள்ளடங்க வேண்டும்!

இலங்கை குறித்த தீர்மானத்தில் மக்கள் நலன் உள்ளடங்க வேண்டும்!

இலங்கை குறித்த புதிய தீர்மானங்கள் எதுவும் பொறுப் புக் கூறுதல், குறித்த இலங்கை மக்களின் சொந்த தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு அமைந்திருக்க வேண்டும் என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2009 இல் இராஜாங்க திணைக்களத்தில் இணைந்துகொண்ட காலப்பகுதியிலிருந்து இலங்கை விவ காரத்தில் நான் ஆழ்ந்த அக் கறையை கொண்டிருந்தேன்.
யுத்தத்தின் இறுதி தருணங்களில் இரு தரப்பும் இழைத்திருக்க கூடிய யுத்த குற் றங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கு மாறு எனக்கு ஆணைவழங்கப்பட்டி ருந்தது.
2009 ஒக்டோபர் நடுப்பகுதியில் நான் இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப் பித்ததுடன், அதன் பின்னர் செனட் விடுத்த வேண்டுகோளின் பேரில் சில அறிக்கை களை சமர்ப்பித்தேன், இலங்கை அதி காரிகள் நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்க தவறியுள்ளனர் என நான் குறிப்பிட்டிருந்தேன்.
உள்நாட்டு நடைமுறைகளுக்கு அழுத் தம் கொடுப்பதற்காக நான் இருதடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண் டேன்.2014 ஜனவரியில் நான் மீண்டும் விஜயம் மேற்கொண்டவேளை எனது விஜயத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங் கள் இடம்பெற்றன. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதர கத்திற்கு அருகில் நூற் றுக்கணக் கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனது முகத்தை பிசாசின் முகத்தை போல சித்தரிக்கும் பாரிய சுவரொட்டிகளை காணமுடிந்தது. நான் உலக சமாதா னத்திற்கு ஆபத்தானவன் என தெரி விக்கும் வாசகங்கள் அதில் காணப்பட்டன. அவர்கள் நான் யாழ்ப்பாணத்தில் இருந்த வேளை கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர், நான் கொழும்புக்கு வந்தவேளை அனைத்தும் அமைதியாக காணப்பட்டது.
இலங்கை விவகாரத்தில் நான் அமெரிக்காவில் உள்ள சகாக்களுடன் இணைந்து தீவிரமாக பாடுபட்டேன்.
ஜெனிவாவிற்கு இரு பிரேரணை களை கொண்டுவந்தோம் மனித உரிமை ஆணையாளரின் விசாரணையை கோரும் பிரேரணையை வெற்றிகரமாக நிறை வேற்றி னோம், குறிப்பிட்ட விசாரணை அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம்.
மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜ யம் மேற்கொள் வார் என நான் எதிர் பார்க்கின்றேன்.
பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரி மைகளுக்காக உறுதியாக நிற்க வேண்டும் என்ற எமது தீர்மானத் திற்கு வெற்றி கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதனை நான் காண் கிறேன்.
விடுதலைப்பு லிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, பொதுமக்களிற்கு எதிராக பாரிய குற் றச்செயல்களில் ஈடுபட்ட அமைப்பிற்கு எதி ராக வலுவான படைபலம் அவசியமானது என நாங்கள் கருதுகின்றோம்.
அதேவேளை அத்தகையை செயற் பாடுகள் யுத்தங்களிற்கான சட்டங்களை கருத்திலெடுப்பவையாக அமைந்திருக்க வேண்டும்,யுத்தம் குறித்த சட்டங்கள் பின் பற்றப்படுதல் என்பதை அடிப்படையாக வைத்து அவற்றைநோக்கவேண்டும்.
மோதலுடன் எவ்வகையிலும் தொடர்பு படாத மக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கபட்டது, மற்றும் சரணடைந்த வர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து நாங்கள் குறிப்பாக ஆழ்ந்த கவலைகொண் டுள்ளோம். எனது அலுவலகம் வெளி யிட்ட அறிக்கையில் இவை குறித்து தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறுதல், உண்மையை ஏற்படுத்துதல், இவற்றிற்கு அதிகளவிற்கு காரணமான தனிநபர்களை விசாரணை செய்தல், குற்றங்கள் தனிநபர்களாலேயே இழைக்கப்பட்டன. சமூகங்களால் இல்லை என்ற அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற இலங்கையர் களின் சொந்த தேவைகளிற்கு பதிலளிப் பவையாக இந்த யோசனைகள் அமைந் திருக்கவேண்டும்.

About The Author

Related posts