Thursday, January 18, 2018

.
Breaking News

சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பின்புலம் தொடர்பில்?..

சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பின்புலம் தொடர்பில்?..

சமூக விரோத செயற்­பா­டு­க­ளிலும் குற்றச் செயல்­க­ளிலும் ஈடு­ப­டும்­போது கைது செய்­யப்­படும் இளை­ஞர்­களின் குடும்பப் பின்­னணி மற்றும் அவர்­க­ளுக்கு இருக்கும் வெளி­நாட்டு தொடர்­பு­கள் அதன் மூலம் அவர்­க­ளுக்கு கிடைக்­கப்பெறும்  உத­விகள் என்­பன தொடர்­பாக விரி­வான விசா­ர­ணைகள் செய்­யப்­பட்டு அவை தொடர்­பான பூரண அறிக்­கை­யொன்று தமக்கு சமர்­பிக்­கப்­பட வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் பொலி­ஸா­ருக்கு பணித்­துள்ளார்.

மேலும் வடக்கில் காணப்­படும் பொலிஸ் சேவை தொடர்­பான வெற்­றி­டங்­க­ளுக்கு அதி­க­ள­வான தமிழ் இளைஞர், யுவ­திகள் விண்­ணப்­பித்து பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் பட்­ட­தா­ரிகள் பொலிஸ் உயர் பத­வி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு முனைப்­புக்­காட்ட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் நேற்­றைய தினம் பொலி­ஸா­ரு­ட­னான சந்­திப்பு ஒன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். இச் சந்­திப்பில் வட­மா­காண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றொஷான் பெனார்ட்டோ , யாழ்.மாவட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெனான்ட்டோ மற்றும் யாழ்.மாவட்­டத்தின் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளி­னதும் பொறுப்­ப­தி­கா­ரிகள், தலைமை பொலிஸ் பரி­சோ­த­கர்கள் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

பொலி­ஸா­ரு­ட­னான இச் சந்­திப்பின் போதே முத­ல­மைச்சர் பொலி­ஸா­ருக்கு இவ்வாறு தெரி­வித்தார். இச்  சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட விட­யங்கள் தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கையில்,

இச் சந்­திப்பில் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளி­னதும் பொறுப்­ப­தி­கா­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். குறிப்­பாக இது­வரை காலமும் சிரேஸ்ட பொலிஸ் அதி­கா­ரி­களே தமக்கு கீழான பொலிஸ் நிலை­யங்­களில் காணப்­படும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கேட்­ட­றிந்து எங்­க­ளு­ட­னான சந்­திப்பின் போது தெரி­யப்­ப­டுத்­து­வார்கள். தற்­போது நான் அனைத்து பொலிஸ் நிலை­யங்­களின் பொறுப்­ப­தி­கா­ரி­க­ளையும் சந்­தித்து அவர்­க­ளுக்கு இருக்கும் அடி­மட்ட பிரச்­ச­னைகள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டினேன்.

குறிப்­பாக தற்­போ­தைய சந்­திப்பில் பொலிஸார் மணல் கடத்தல் பிரச்­சனை தொடர்­பாக கூறி­யி­ருந்­தார்கள். அதா­வது மாவட்ட செய­ல­கத்­தினால் மண­லுக்­கான பேமிட் வழங்­கப்­பட்­டுள்ள போதும் அப்­பே­மிட்டை வைத்­துக்­கொண்டு அள­வுக்கு அதி­க­மான மண்­ணினை எடுத்து செல்­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தி­ருந்­தார்கள். உண்­மையில் இம் மணல் தொடர்­பான பிரச்­சினை தொடர்­பாக ஜனா­தி­பதி இங்கே வந்­தி­ருந்த போது பேசி­யி­ருந்தோம். அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக நான் கூறி­யி­ருந்தேன்.

இதே­போன்று குப்பை திண்ம கழிவு பிரச்­ச­னைகள் தொடர்­பாக பொலி­ஸாரால் கூறப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்­பாக தற்­போது ஒர் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் யாழ்.மாவட்­டத்தில் சேரு­கின்ற குப்பை கழி­வுகள் கீரி­ம­லையில் அதற்­கு­ரிய இடத்தில் கொட்­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இச் சந்­திப்பில் முக்­கிய பிரச்­ச­னை­யாக பேசப்­பட்ட விடயம் தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் பதின்ம வயது இளை­ஞர்கள் குறிப்­பாக 16தொடக்கம் 18 வயது வரை­யான இளை­ஞர்கள் பாட­சாலை கல்­வியை இடை­நி­றுத்­தி­விட்டு அதிக விலை­சூ­டிய மோட்டார் சைக்­கிள்­களில் மது போதையில் சமூக விரோத செயல்­க­ளிலும், குற்றச் செயல்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும், அவர்­களை கட்­டு­ப­டுத்த முடி­யாத நிலை இருப்­ப­தா­கவும் அது அவர்­க­ளது பெற்­றோர்­க­ளா­லேயே முடி­யாமல் இருப்­ப­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இது தொடர்­பாக பார்க்­கின்ற போது இத்­த­கைய சமூக விரோத குற்றச் செயல்­களில் ஈடு­ப­டுவோர் மொத்­தத்தில் 100ற்கும் 200ற்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளா­கவே உள்­ளனர். ஆனால் இவர்­களால் சமூ­கத்­திற்கு இளைக்­கப்­படும் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது. இதற்கு என்ன காரணம் என பார்க்­கின்ற போது வெளி­நா­டு­களில் இருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் அதனை நல்ல காரி­யங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தாமல் குடிப்­ப­தற்­கா­கவும், போதை பொருட்­க­ளுக்­கா­கவும் செலவு செய்து இவ்­வா­றன குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.

இவ்­வா­றான குற்றச் செயல்கள் சமூக விரோத செயல்­களில் ஈடு­ப­டு­வோரை இனி­வரும் காலங்­களில் கைது செய்யும் போது அவர்­க­ளுக்கு வெளி­நாட்டில் இருந்து கிடைக்கும் உத­விகள் தொடர்­புகள் என்­பன தொடர்­பாக விரி­வான விசா­ர­ணை­களை நடாத்தி அது தொடர்­பான பூரண அறிக்­கை­யொன்றை சமர்­பிக்க வேண்டும் என நான் பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை பிறப்­பித்­துள்ளேன்.

மேலும் வடக்கில் தமிழ் பொலி­ஸா­ரது எண்­ணிக்கை குறை­வாக உள்ள நிலையில் அதற்கு தமிழ் இளைஞர், யுவ­திகள் விண்­ணப்பம் செய்­வது குறை­வாக இருப்­ப­தாக வடக்கு மாகாண யாழ்.மாவட்ட பொலிஸ்மா அதி­பர்கள் தெரி­வித்­துள்­ளனர். இது­வி­ட­யத்தில் எமது இளைஞர் யுவ­திகள் ஒன்றை விளங்­கி­கொள்ள வேண்டும். அதா­வது பொலிஸார் எதி­ரா­ன­வர்கள் என்ற எண்­ணத்­துடன் நாம் போர் காலங்­களில் பார்த்­தி­ருந்தோம். தற்­போது யுத்தம் நிறை­வ­டைந்­து­விட்­டது.

நாம் கூறு­வது போன்று பொலிஸ் அதி­காரம் எங்­க­ளுக்கு கிடைக்­கப்­பட வேண்­டு­மானால் அதனை ஆளக்­கூ­டி­ய­வர்­க­ளாக நாம் இருக்க வேண்டும். அதற்கு அதி­க­ள­வான தமிழ் பொலிஸார் காணப்­பட வேண்டும். நாம் இங்­கி­ருக்கும் வெற்­றி­டங்­க­ளிற்கு விண்­ணப்­பிக்­காது விட்­டு­விட்டால் அதனால் பாதிப்பு எமக்கே காணப்­படும். தற்­போது தமிழ் பொலிஸார் எண்­ணிக்­கையில் குறை­வாக இருப்­ப­தா­லேயே அவர்­க­ளு­டைய ஆதிக்கம் அதி­க­மாக இருக்கும்.

ஆனால் நாம் மெல்ல மெல்ல எமது தமிழ் பொலி­ஸா­ரது எண்­ணிக்­கையை அதி­க­ரித்தால் காலப் போக்கில் வடக்கில் முழு­மை­யான தமிழ் பொலிஸார் காணப்­ப­டு­வார்கள்.அத்­துடன் பட்­ட­தாரி மாண­வர்­களும் பொலிஸ் சேவை­யிலே உயர் பத­வி­களை பெற்றுக்கொள்ளும் வகையில் விண்ணப்பங்களை மேற்கொள்ளவேண்டும்.

இவற்றைவிட இச் சந்திப்பில் கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லைகள் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சாவகச்சேரி ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்திருந்ததுடன் இளவாளை பொலிஸார் தமது பொலிஸ் நிலையம் தனியாரது காணிகளில் இருப்பதால் அவர்கள் காணிகளை மீள வழங்கவேண்டும் என கோரிவருகின்றார்கள் ஆகவே அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார்கள். இவ்வாறன விடயங்களே இச் சந்திப்பில் பேசப்பட்டிருந்தது என முதலமைச்சர் தெரிவித்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *