Tuesday, October 24, 2017

.
Breaking News

கூர்க்காலாந்து போராட்டம்: ரெயில் நிலையத்துக்கு தீ வைத்து வன்முறை!

கூர்க்காலாந்து போராட்டம்: ரெயில் நிலையத்துக்கு தீ வைத்து வன்முறை!
மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் பகுதியை பிரித்து கூர்க்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி அந்த பகுதியில் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு சார்பில் நடந்து வரும் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகள், கடைகள், உணவு விடுதிகள் போன்றவை அனைத்தும் நேற்று 29–வது நாளாக மூடப்பட்டு இருந்தன.
இந்த போராட்டத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் சவுராஸ்தா–மால் சாலையில் உள்ள கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாக அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் நேற்று காலையில் தீ வைத்தனர். மேலும் கயாபரி பகுதியில் உள்ள ரெயில் நிலையம் ஒன்றுக்கும், தீஸ்தா நதிக்கரையில் உள்ள காட்டு பங்களா ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் பெருத்த சேதம் ஏற்பட்டது.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் நேற்று 26–வது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டது. மேலும் போலீசார், ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகள் தொடர்ந்து அங்கே ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் அங்கு போராட்டமும், வன்முறையும் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *