Saturday, February 24, 2018

.
Breaking News

புதைந்து கிடக்குதே புதையலுமங்கே!… } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..

புதைந்து கிடக்குதே புதையலுமங்கே!… } சங்கர சுப்பிரமணியன். மெல்பேண் ..

எங்குளதென நான் கேட்டேன் அவளிடம்

அங்குளதென்றாள் அழகிய சுந்தரி
ஏன் அங்குளதென்றேன் அவளிடத்தே
அங்கிருந்தாலன்றோ நீவிர் தேடுவீரென்றாள்
தேடிட அதுவென புதையலா என்றேன்
ஆமது புதைந்து கிடப்பதால் புதையலென்றாள்
என் ஆருயிர் நங்கையும் புன்னகைத்தே
புதைந்தா இருக்குறது என ஐயமுடன் வினவ
புதைந்துதான் கிடைக்கிறது பிறகென்ன என்றாள்
புதைந்து கிடப்பதை எவ்வாறு காண்பதென்றேன்
அதுதானன்றோ   சாமர்த்தியம் என்றாள்
அதென்ன அவ்வளவு இரகசியமா என்றேன்
இரகசியம் பரமரகசியம் என்றிடவே
கடலின் ஆழம் கண்டிடலாம் ஆனால்
அதைக்கன்னியரிடம் கண்டோருமிங்குண்டோ
அவ்வாழம் அறிந்திடவும் வழியுளதோ
வழிவேண்டின் என் கண்ணை உற்று நோக்குமென்றாள்
அவள் கண்களையும் நான்  உற்றுநோக்க
என்கரம் மீதவள் கரம்படிய
என்கரமோ அவளிடுப்பில் வளைந்து இழுத்தனை அவளை
மார்பினில் சாய்ந்தேன் மறுமொழி பேசாதிருந்தாள்
மௌனம் கலைந்தே புரிகிறதா இப்போதெங்குள தென்றாள்
ஆமென்றேன் காதலும் அடிமனதிலங்கே
புதையல் போலவும் புதைந்துளதென்றேன்
பொங்கி எழும் பூம்புனல் போல
பூவையவளும் என்மேல் படர்ந்தாள்
புதையலாம் காதலை அடிமனதில் நான் தேட!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *